பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் உந்திக்கமலம் எனப்படுவதும், குணதத்துவம், பிரகிருதியி னின்றும் நேரே தோன்றும் காரியமாதல் பற்றியேயாகும் என்பதும் அறியப்படும். (ஊ) தத்துவ நிலைகள் மூலப்பிரகிருதி மிகவும் துலம். அசுத்தமாயை துலம். சுத்தமாயை சூக்குமம். சூக்குமத் தில் துலம் வியாப்பியம் (உள்ளடக்கம்). ஆதலின், சுத்தமாயை வியாபகமும், அசுத்தமாயை அதில் வியாப்பியமும் ஆகும், பிரகிருதி மாயை அசுத்த மாயையின் காரியமாதலின், அஃது அசுத்தமாயையின் வியாப்பியம் என்பது தானே போதரும். குக்குமமும் வியாபகமுமாகிய பொருள் மேலே உள்ளது. என்றும், தூலமும் வியாப்பியமுமான பொருள் கீழே உள்ளது. என்றும் சித்தாந்தம் கூறும். காரணம், சூக்குமமாதலின் அது மேலே உள்ளதும், காரியம் துலமாதலின் அது கீழே உள்ளதும் ஆகும். எனவே, தத்துவங்களில்முன்னர்த் தோன்றியது மேலே உள்ளதும், பின்னர்த் தோன்றியது. கீழே உள்ளதும் ஆதல் தெளியப்படும். இம்முறையில் பிருதிவி என்னும் தத்துவமே எல்லாவற்றிலும் கீழே உள்ளது என்பதும், சிவம் என்னும் தத்துவம் எல்லாவற்றிலும் மேலே உள்ளது என்பதும் அறிந்து தெளியத்தக்கது. சிவதத்துவம் நாதம் என்றும் சொல்லப் படுதலின் நாதாந்தம் என்பது முப்பத்தாறு தத்துவங்களும் கடந்தநிலை என்பதும் விளங்கும். (எ) இன்னோர் உண்மை: தத்துவங்களின் முறை தோற்றமுறை (உற்பத்திக் கிரமம்) ஒடுக்கமுறை (சங்காரக் கிரமம் என இருவகையாகப் பேசப்பெறும். தோற்றமுறையில் சிவதத்துவத்தை முதலாக வைத்து எண்ணுதலும், ஒடுக்கமுறை யில் பிருதிவியைமுதலாக வைத்து எண்ணுதலும் முறைகளாக இருந்து வருதலை அறிந்து கொள்ளலாம்.