பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 - சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் மெய்கண்டதேவரின் மாணாக்கர்களுள் ஒருவராவார். இந் நூலைத் தவிர இவரைப்பற்றிய வேறு குறிப்பு ஒன்றும் தெரிந்திலது. இவர் தம் நூலில் தத்துவங்களைச் சுருக்கமாகவே உரைக்கின்றார். இதில் தம் குருநாதரை நூலாசிரியர் வினவு கின்றார்; குருநாதர் சீடருக்கு விளக்கம் தருகின்றார். இங்ங்னம் வினா-விடையாக அமைந்த இப்பனுவல் சித்தாந்தம் பயில விரும்புவார்க்கு முதற்கண் பயில வேண்டிய நூலாக அமை கின்றது. இதில் ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சுத்த சத்துவம், ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள், உயிரியல்பு, பதியியல்பு, ஐந்தெழுத்து, நடராச தத்துவம், அத்துவித முத்தி, குருலிங்க சங்கம வழிபாடு என்பவை விளக்கப்பெறுகின்றன. பக்தியுடன் பயின்றால் மெய்கண்டாரே நேரில் உபதேசம் செய்யும் உணர்வு பெறலாம். காப்பு, சிறப்புப் பாயிரம் உட்பட 55 வெண்பாக்களால் அமைந்துள்ளது இப்பனுவல். (7) சிவப்பிரகாசம்: இந்நூலையும் ஏனைய ஏழு நூல்களையும்" அருளிச்செய்தவர் கொற்றவன்குடி உமாபதி தேவநாயனார். இவரைச் சுருக்கமாக உமாபதி சிவம் என்றும் வழங்குவர். இவர் அருள்நந்திதேவரின் மாணாக்கராகிய மறைஞான சம்பந்தரின் மாணாக்கராவர். இவர் தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவர். இவர் அதி தீவிர பக்குவத்தால் மறைஞானசம்பந்தரை அடைந்து உபதேசம் பெற்று அவர் வழி 10. இந்த எட்டும் சித்தாந்த அட்டகம் என்ற பெயராலும் வழங்கப் பெறும். இவற்றுள் உண்மை நெறி விளக்கம்’ என்பதைச் சீகாழித் தத்துவராயர் என்பார் செய்ததாகச் சொல்லுவதும் உண்டு. r 11. இவர் வைதிகப் பார்ப்பன மரபினர். யாதொரு நூலும் செய்திலர்.