பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 255 எனக் குற்றம் ஐந்து (மாற்சரியம் குரோதத்துடன் அடங்கும்); குணத்தின் கூறு சாத்துவிகம், இராசதம் தாமதம் என்னும் மூன்று: சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் வாக்குகள் நான்கு. இவை அனைத்தையும் சேர்த்துத் “தாத்துவிகங்கள் அறுபது. தத்துவங்கள் இருபத்து நான்கே' எனக்கூறுகின்ற மதங்களும் கருவிகள் தொண்ணுற்றாறு என்பதனைப் பிறவாறு ஒன்றுபடக் கூறும். (iv) அண்டங்களின் வகைகள் அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன." என்று அண்டங்களைப்பற்றி மணிவாசகப் பெருமான் கூறியுள்ளதை நினைவுகூரலாம். இத்திருமொழியின் கீழ்க் காணப்பெறும். சிவனது துல சூக்குமத்தை வியந்தது என்ற குறிப்பையும் சிந்திக்கலாம். தத்துவங்கள் உயிர்கட்குத் தனுவும் கரணமுமா நிற்பனவேயன்றிப் புவனமும் போகமுமாயும் உள்ள ஆதலின், அவையும் தத்துவங்களின் காரியமாகிய தா விகங்களாம். இவற்றுள் புவனம் உலகங்கள் பலவற் உள்ளடக்கிய அண்டங்களாய் நிற்கும். அஃதாவது ஆல தத்துவங்கள் ஒவ்வொன்றிலும் எண்ணிறந்த அண்டங்க அவ்வத்தத்துவத்தின் இயல்பிற்கேற்ற பரப்புடையனவாய உள்ளன. அவ்வண்டங்கள் ஒவ்வொன்றையும் காத்தற்கு :உருத்திரர் பலர் உளர். அவர்கள் பெயரால் அமைந்த பல புவனங்களாக அவ்வண்டங்களின் உள்ளும் புறம்புமாய s 77. திருவா. திருவண்டப் பகுதி-அடி (1.4)