பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 257 காலாக்கினி உருத்திரர், ஆடகேசுரர், கூர்மாண்டர்’ என்னும் உருத்திரர்கள் தத்தம் புவனங்களில் வசிப்பர். பூமியின் மேற்பரப்பே மக்கள் வாழும் பூலோகம். இஃது ஒன்றை ஒன்று சூழ, ஏழுதீவுகளையுடையது. இவை சம்புத்தீவு, சாகத்தீவு, குசத்தீவு, கிரெளஞ்சத்தீவு, சான்மலித்தீவு, கோமேத கத் தீவு, புட்கரத் தீவு என்பவையாகும். சம்புத்தீவைச் சுற்றி உப்புக்கடல் உள்ளது. இவ்வாறே மற்றத் தீவுகள் முறையே பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ் சாற்றுக்கடல், மதுக்கடல், சுத்தநீர்க் கடல் என்னும் கடல்கள் சூழ்ந்துள்ளன. சுத்த நீர்க்கடலைச் சூழ்ந்து பொன்னிலமும், அதனைச் சூழ்ந்து இருள் நிலமும், அதனைச் சூழ்ந்து பெரும்புறக்கடலும் உள்ளன. பூலோகத்தை நிலைபெறுவித்தற்கு அதன் நடுவே உருவாணியாய் அமைந்துள்ளது மகாமேருமலை. இதில் மேல் உலகத்திலுள்ள இந்திரன் முதலிய திசைக்காவலர்கட்கும், அயன், மால் சீகண்ட உருத்திரர் என்பவர்கட்கும் உரிய இடங்கள் ஒன்றன்மேல் ஒன்றாகவுள்ளன. இந்திரன் தவிர ஏனைய திக்குப்பாலகர்கட்கும் அவரவர் திக்கில் இடங்கள் அமைந்துள்ளன. இவர்கள் தம்தம் இடங்களில் அமர்ந்து தத்தம் அளவிற்கேற்ற அதிகாரங்களை இப்பூவுலகில் செலுத்தி வாழ்வர். சீகண்ட உருத்திரர் வாழும் இடமே எல்லா இடத்திற் கும் மேம்பட்ட இடமாகும். இக்கொடுமுடியே சோதிகட்கம் எனப்படும். 'கைலாசம்’ ஆகும். எனவே, பிரகிருதிக்குமேல் உள்ள சீகண்ட உருத்திரர் புவனம். மகாகைலாயம் ஆகும்; சுத்த மாயாஉலகங்கள் சிவலோகம்’ எனப்படுதலால் சில பொழுது இவ்வுருத்திர உலகமும் சிவலோகம்' என்று வழங்கவும் பெறும் என்பது அறியப்பெறும். 18