பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 259 இவ்வண்டங்களில் திசைக்குப் பத்தாக பத்துத் திசைகளிலும் நூறு உருத்திர புவனமும், அண்டத்தின் உள்ளே கீழ் மூன்றும், மேல் மூன்றம் அண்டத்தின் மேலே இரண்டும் ஆகப் புவனங்கள் நூற்றெட்டு ஒவ்வோர் அண்டத்திலும் அமைந்துள் ளன. பிருதிவிக்கு மேலே உள்ள தத்துவங்களிலும் இவ்வாறே புவனங்கள் உள்ளன. தத்துவங்கள் புவனங்கள் என்பவற்றுடன் வேறு உள்ள மாயாகாரியங்களைக் கூட்டி அனைத்தும் அத்துவாக்கள் என்று வழங்கப்பெறும். ஒரு குறிப்பு: சைவாகம முறைப்படி மந்திரம் பதி னொன்று. அவை பஞ்ச பிரமமந்திரங்களும் ஷடங்க மந்திரங்களுமாகும். பதம் எண்பத்தொன்று என்று சொல்லப் பெறுகின்றது. வன்னம் (எழுத்து) வடமொழியில் உள்ள ஐம்பத்தொன்றாகும். புவனம் இருநூற்று இருபத்து நான்கு. தத்துவம் முப்பத்தாறு: கலை ஐந்து. இவற்றுள் கலைகளில் மற்றவை அடங்கி நிற்கும். இவ்விவரங்களும் உளங்கொள்ளத் தக்கவை. (அ) அத்துவாக்கள் இதுகாறும் கூறிவந்த மாயையின் காரியங்களைத் தொகுத்து நோக்கினால் அவை ஆறு பகுதி யாய் நிற்றல் விளங்கும். அவை மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பனவாகும். இவற்றுள் முன்னைய மூன்றும் பொற்பிரபஞ்சங்கள். பின்னைய மூன்றும் பொருட்பிரபஞ்சங்கள். இந்த ஆறுமே அத்துவாக்கள் எனப்படும். அத்துவா என்பதற்குப் படிவழி என்பது பொருள். இவை ஆறும் ஆன்மா மேலேறுவதற்குப் படிவழிபோல் இருத்தலின் அத்துவா’ எனப்பெயர் பெற்றன." இந்த 81. வேதாந்த தேசிகரின் 'பரமபத சோபானம் என்பதையும் ஈண்டு சிந்திக்கலாம். (சோபானம் - படி). இவை வானேறும் ஒன்பது படிகளாக விளங்கப் பெற்றுள்ளன. (தே.பி. 133 - 153)