பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் என்று கூறினார் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியனார். வள்ளுவப் பெருந்தகையும், சுவையொளி ஊறோசை நாற்றம் என்றைந்தின் வகைதெரிவான் கட்டே உலகு" என்று கூறிப் போந்தார். எனினும், காலம் உலகம் உடம்பே உயிரே பால்வரை தெய்வம் வினையே பூதம் நிலனே காலம் கருவி என்றா." என்றற்றொடக்கத்தனவாகத் தொல்காப்பியரும், வலியறிதல், இடனறிதல் என்பவற்றோடு, காலமறிதல் என்பதையும் திருவள்ளுவர் விதித்தமை முதலியவற்றாலும், வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது" என்பது முதலியவற்றாலும் திருவள்ளுவர் பெருமானும் காலத்தையும் நியதியையும் உடன்பட்டுக் கூறினார் என்பது அறியப்படும். ஆதலின் மூலப்பிரகிருக்கு மேலும் தத்துவங்கள் உள்ளன என்பது அவர்கட்கு உடன்பாடென்பது இனிது பெறப் படுகின்றது. இதனால் எல்லோர்க்கும் எளிதில் விளங்குதல் பற்றி ஐம்பூதங்களே எங்கும் வருவனவாயின என்பது தெளி வாகும்.” இதனால் பஞ்சகலைகட்குச் சொல்லப்பட்ட வடிவம், நிறம், அதிதெய்வம் என்பவற்றாலே ஐம்பூதங்களையும் 83. குறள்-27 (நீத்தார் பெருமை) 84. தொல்-சொல். கிளவியாக்கம்-58 85. குறள்-377 (ஊழ்) - 86. ஆழ்வார் பாசுரங்களிலும், நாயன்மார் பாடல்களிலும் இக்குறிப்பு பெருவழக்காக உள்ளது. - - -