பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் . 3 (பாசம்) 263 வழிபடுதல் விதிக்கப்பெற்றது. இதன் விவரங்களையெல்லாம் மெய்கண்ட நூல்களிலும் சைவாகமங்களிலும் கண்டு தெளிய லாம். பஞ்சகலைகளை தியானித்தல் முதலிய வழிபாட்டில் நிவிர்த்தி முதலிய ஐந்திற்கும் அதிதேவர்கள் வருமாறு. - நிவிர்த்தி...பிரமன் பிரதிட்டை...திருமால் வித்தை...உருத்திரன் சாந்தி...மகேசுவரன் சாந்தியதீதை...சதாசிவன் நிலம் முதலிய ஐம்பூதங்கட்கும் இம்முறையிலேயே இவர்கள் அதிதேவர்களாவர். இவர்கட்குத் தொழில் முறையே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன வாகும். - நிவிர்த்தி பிரதிட்டை என்னும் கலைகட்குட்பட்ட புவனங்களில் உள்ள கடவுளர்கள் தேவர் என்ற பெயரைப் பெறுகின்றனர். இவர்களது சரீரம் பிராகிருத சரீரமாகும். வித்தியாகலைக்குட்பட்ட புவனங்களில் உள்ளோர் உருத்திரர்’ எனப்படுவோர். இவர்தம் சரீரம் மாயே யம்’. ஏனைய இருகலைகளில் உள்ளோர் சிவர் எனப்படுவர். இவரது சரீரம் 'வைந்தவம்’. நிவிர்த்தி பிரதிட்டா கலைகளில் படைத்தலையும் காத்தலையும் உடைய நான்முகனும் திருமாலும் புண்ணியம் மிகவுடையவர். அழித்தலைச் செய்யும் குணிருத்திரன் சிவ புண்ணியம் மிகவுடையவன். இம்மூவரும் காரணக்கடவுளர் எனப்படுவர். இம்மூவருக்கும் முதல்வராகிய சீகண்ட உருத் திரரே இவ்விருகலைகளிலும் உள்ளோர்க்கு மகேசுவரனும் சதாசிவனுமாய் நின்று மறைத்தல், அருளல்களைச் செய்வார். வித்தியாகலைகளில் உள்ளவர்கட்கு உருத்திரருட் சிறந்தோர் படைத்தல் முதலிய முத்தொழில்களைச் செய்ய, அனந்த