பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் தேவரே மகேசுவரனும் சதாசிவனுமாக நின்று மறைத்தல் அருளல்களைச் செய்வார். சீகண்டரும் அனந்த தேவரும் அருளுதல் அபரஞானமாகிய வேதாகமங்களை உணர்த்தல் ஆகியவற்றைச் செய்வர். சாந்தி, சாந்தியதீத கலைகளில் உள்ளோர்க்குப் பரமசிவனே தடத்த சிவனாய் நின்று எல்லா வற்றையும் நேரே செய்வான். (vii) பாசங்களைப்பற்றி மேலும் சில பாசங்களைப்பற்றி மேலும் சில கருத்துகள் ஈண்டுத் தெரிவிக்கப் பெறுகின்றன. (அ) பிரணவ கலைகள் படைத்தல் முதலிய தொழில் களுக்குக் கூறப்பெற்ற முறையே அக்கரங்களைச் செலுத்து வதற்கும் பொருந்தும். அதாவது சொற்பிரபஞ்சம் முழுவதை யும் பிரணவத்துள்-அஃதாவது ஓம்’ என்பதனுள்-அடக்கிக் கூறுதல் சித்தாந்த மரபாகும். பிரணவம் ஓம்’ எனக் கூறப்பெறுவதைச் சமட்டிப் பிரணவம்’ என்று வைத்துக் கொண்டு தாம் அதனை, "அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம்’ என ஐங்கூறுபடுத்தி, அக்கூறுகளை வியட்டிப் பிரணவம்’ எனக் கூறும் மரபும் உண்டு. இக்கூறுகள் 'பிரணவ கலைகள் எனப்படும். இந்த ஐங்கூறுகளும் ஐந்து அக்கரம் (அக்கரம் - அட்சரம்) எனப்படும். இவ்வக்கரங்களா லேயே உள்ளத்தில் உணர்வுகள் உண்டாகின்றன. அஃதாவது, அகாரம் அகங்காரத்தை இயக்கும். உகாரம் புத்தியை இயக்கும். மகாரம் மனத்தை இயக்கும். விந்து சித்தத்தை இயக்கும். நாதம் புருடனை இயக்கும். இவற்றால் இங்ங்னம் அந்தக்கரணங்கள் செயற்படுதலாலே உணர்வுகள் தோன்றியும் மறைந்தும் வரும் என்பது தெளியப்படும். இவற்றுள் அகா