பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த சாத்திரங்கள் | 1 நின்றமையால் ஏனைத் தில்லை வாழ் அந்தணர்கள் விலக்கி விட்டனர். இதனால் இவர் தில்லைக்கு அருகிலுள்ள கொற்ற வன்குடியில்'மடம் அமைத்துக் கொண்டு தங்கியிருந்த காலத்தில் தில்லைவாழ் அந்தணர்களும் பிறரும் வியக்கும் வண்ணம் பல அற்புதங்களை நிகழ்த்தினார். மெய்கண்ட சந்தானத்தில் உள்ள மெய்கண்டாா, அருள் நந்திதேவர், மறைஞானசம்பந்தர், உமாபதிதேவர் எனப் போற்றும் நால்வரும் சந்தான குரவர் எனப் போற்றப் பெறுவர். இவர்களுடைய வரலாறுகள் விரிவானவை. இவற்றைச் சந்தானாச்சாரியார் புராண சங்கிரகம்’ என்ற நூலில் காணலாம். சிவப்பிரகாசம் சிவஞான போதத்தின் சார்பு நூலாகும். இது சிவஞான சித்தியார் போலச் சிவஞான போதத்தை அடியொற்றிச் செல்லுவதாக அமையவில்லை. போதத்தின் கருத்தை மட்டிலும் உளங்கொண்டு, பொது, உண்மை’ என்னும் இரு பிரிவினதாய் நடைபெறுகின்றது. முன்னைய முதல் வழிநூல்களில் விளக்கப்பெறாத பல நுண்ணிய கருத்துகள் ஈண்டு விளக்கம் அடைகின்றன. இதனால் அவ்விரு நூல்களிலும் நுவலப் பெறாத சில மூல ஆகம உப ஆகமக் கருத்துகளும் இதில் சொல்லப் பெற்றுள்ளதாக நூலாசிரியரே தெளிவாக்குகின்றார். இவற்றால் முன்னைய நூற்பொருள்களைச் சுருங்க உணர்வதற்கு இந்நூல் ஒருவாறு துணையாக இருக்கும். ஆகவே, அந்நூல்களைப் பயில்வதற்கு முன்னதாக இந்நூல்களைப் பயிலலாம். இந்நூல் நூறு "விருத்தப்பாக்களால் அமைந்தது. 12. அண்ணாமலைப் பல்கலைக் கழக வளாகத்தில் உள்ளது. "கொற்றவன்குடிக் குடியிருப்பு” என்ற பெயருடன் வழங்கும் இதில் இப்போது பல்கலைக் கழக ஆசிரியர்கள் வசிக்கின்றனர்.