பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவங்கள் - 3 (பாசம்) 265 ரத்தை நான்முகனும், உகாரத்தைத் திருமாலும், மகாரத்தை உருத்திரனும் விந்துவை மகேசுரனும், நாதத்தைச் சதாசிவனும் செயற்படுத்தி நிற்பர் என்பதும் அறியப்படும். இன்னும் ஒரு கருத்தையும் ஈண்டு உளங் கொள்ள வேண்டும். பிரணவ கலைகளாகக் கூறப்பெறும் அகாரம் முதலியன துல-சூக்குமங்களது குறியீடாகும். அஃதாவது அகாரமும் உகாரமும் மிகவும் துலம். எனவே, அவை வைகரி வாக்கைக் குறிப்பனவாகும். மகாரம் துலம். ஆகவே அது மத்திமை வாக்கைக் குறிக்கும். விந்து சூக்குமம், எனவே, அது பைசந்தி வாக்கைக் குறிக்கும். நாதம், அதிசூக்குமம். எனவே, அது சூக்குமை வாக்கைக் குறிக்கும். அக்கரங்களை இயக்குதல் என்பது இவ்வாக்குகளை இயக்குவதேயாகும். வைகரிவாக்கும் மத்திமை வாக்கும் பிராணன், உதாணன் என்னும் காற்றுகளின் சார்புடையனவாதலின் அவற்றைக் குணமூர்த்திகள் செலுத்துதல் கூடும் என்பது அறிந்து தெளியப்படும். - - உயிர் சாக்கிரம் முதலிய கீழாலவத்தை ஐந்தனையும் அடையும்பொழுது, சொப்பனத்தில் வைகரி வாக்கு இல்லை. சுழுத்தியில் வைகரி, மத்திமை என்ற இரண்டு வாக்குகளும் இல்லை. துரியத்தில் சூக்குமை வாக்கே உள்ளது. துரியாதீதத் தில் அஃது அதிசூக்குமமாய் நிற்கும். இப்பிரணவ கலைகள் இன்னும் பன்னிரண்டாகவும், பதினாறாகவும் பகுத்து 'பிராசாதம் என வைத்து யோகமுறையில் தியானிக்கப்படும். எனவே, இவ்வாக்குகளின் வழியே கன்மத்துக்கீடான எண்ணங்கள் அந்தக்கரணங்களில் தோன்றி வினைகளை நுகர்தலும் ஈட்டுதலும் உண்டாக்கும். பின்னர் அவ்வினை களுக்கேற்றவாறு நிவிர்த்தி பிரதிட்டா கலைகளில் உள்ள