பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் புவனங்களில் மேலும் கீழுமாக மாறி மாறிப் பிறந்து இறந்து வரும் நிலை உண்டாகும். (ஆ) பிறப்பு இறப்புகள் ஐங்கோசங்களை நாம் அறி வோம். அன்னமய கோசமாகிய தூலசரீரம் நீக்குவதே "இறத்தல் என்பதாகும். ஏனைய நாற்கோசங்களாகிய சூக்கும சரீரமும் பரசரீரமும் முத்தி எய்துங்காறும் நீங்காது நின்று முத்தி காலத்தே நீங்குவனவாகும். ஆகவே ஒரு துலசரீரம் நீங்கிய பின்னர்ச் சூக்கும சரீரத்தில் நின்று அடுத்த பிறப்பாகிய துலசரீரம் தோன்றும். அங்ங்னம் தோன்றுமிடத்துப் பூலோக சரீரம் பெளதிக சரீரமாகும். பூலோகத்திற்கு மேலே உள்ள உலக சரீரங்கள் எல்லாம் பூதசார சரீரமாகும். அவ்வுடம்பும் உலகங்களும் புண்ணியம் உடையார்க்கு உரியனவாகும். நரகலோகத்திற்க உரிய சரீரம் யாதனாசரீரமாகும். பூலோகத்து உயிர்களைத் துலசரீரத்தினின்றும் பிரித்துச் சுவர்க்கம், நரகம், பூமி என்பவற்றில் செலுத்துபவனே தென்றிசைக் கடவுளாகிய கூற்றுவன் ஆவான். புண்ணிய பாவங்கள் அநுபவித்துத் தொலைந்தால் அத்துல சரீரங்கள் நீங்கும். நீங்கவே, அடுத்த வினைக்குரிய துலசரீரம் பின் சூக்கும சரீரத்தினின்றும் தோன்றும். உயிர்கட்கு இங்ங்னம் பிறப்பும் இறப்பும் மாறி மாறி வரும் என்பதை நாள் தோறும் நிகழும் சொப்பனம் முதலிய அவத்தைகளிலிருந்தும் நன்குணரலாம். இதற்காகவே திருவள்ளுவர் பெருமானும், உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு” என்ற அரியதொரு மணிமொழியை அருளிச் செய்தார். 87. குறள்-339 (நிலையாமை) - - .