பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் மேற்கூறிய நான்கினும் வேறாகவுள்ள மற்றொன்று திரோதான சக்தி என்பது. இஃது உண்மையில் மலமோ அல்லது பாசமோ அன்று இறைவனது அருளாகிய சக்தியே. எனினும், இதுவே மேற்கூறிய பாசங்கள் தம்செயலைப் புரியு மாறு அவற்றின் வழிநின்று அவற்றது சக்திகளைத் தூண்டு கின்றது. இதனாலேயே இம்மலங்களின் காரியங்களாகிய மறைப்புகள் நடைபெறுகின்றன. இஃது இல்லையேல் பாசங் களின் செயல்களாகிய மறைத்தல் தொழில்கள் நிகழமாட்டா. இதனால் இதுவே ஒரு மலமாக அல்லது பாசமாகச் சொல்லப் பெறுகின்றது. இறைவன் செய்யும் தொழில்கள் ஐந்தில் 'மறைத்தல் என்பது இவ்வாறு இத்திரோதான சக்தியைக் கொண்டு மறைத்தலைச் செய்வதாகும். தெளிவாக்கம் ஆணவம், கன்மம், மாயை என்பவற் றின் சக்திகளை இறைவன் தன் ஆற்றலைக் கொண்டு துண்டாதுவிடின் அவற்றால் பந்தம் உயிர்கட்கு என்றும் இருந்தே தீரும். ஆகையால் அச்சக்திகளைத் தூண்டிச் செயற்படுத்தினால் அவை செயற்பட்டுத் தமது சக்தி மெலிவடைந்தொழியும். அங்ங்னம் ஒழியவே, அவற்றால் உண்டாகும் மறைப்பு நீங்கி விளக்கம் பெற்று உயிர்கள் உயர் நிலையை அடையும். ஆதலால் அங்ங்னம் செய்தல் நற்செயலேயாகும் என்பது அறியப்படும். எனவே, திரோதான சக்தி அருளேயாயினும், அது மறக்கருணையாய்க் கொடுமை போலத் தோன்றுதலின், அதனை அருட்சக்தி என வழங்காது 'திரோதான சக்தி' என்றும், திரோதானமலம்' என்றும் வழங்குவர். மலங்களின் சக்தி மெலிந்து உயிர்கள் பக்குவ நிலையை அடையுமாயின், இத்திரோதான சக்தியே தனது மறுதலைச் செயலின்றும் நீங்கி அருட்சக்தியாக மாறி, ஆன்மாவில் பதியும். அதுவே சத்தி நிபாதம் எனப்படும்.