பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் இம்மலம் மூன்றி னோடும் இருமலம் இசைப்பன் இன்னும்." மாயையின் காரி யத்தை மாயேய மலம தென்றும் ஏயும்மும் மலங்கள் தத்தம் தொழிலினை இயற்ற ஏவும் தூயவன் றனதோர் சக்தி திரோதான கரிய தென்றும் ஆய்வர்இம் மலங்கள் ஐந்தும் அணுக்களை அணைந்து நிற்கும்!" என்ற சித்தியாரின் செய்யுட்களையும் காணலாம். இதில்-நெல் என்றது அரிசியை. - மோகம்மிக உயிர்கள்தோறும் உடனாய் நிற்கும் மூலஆ ணவம்ஒன்று முயங்கி நின்று பாகம்மிக உதவு திரோதாயி ஒன்று; பகர்மாயை ஒன்று படர்கன்மம் ஒன்று; தேகமுறு கரணமொடு புவன போகச் செயலாரும் மாமாயத் திரட்சி ஒன்று; ஆகடிலம் ஐந்தென்பர் ஐந்தும் மாறாது அருள் என்ப தரிதென்பர் அறிந்து ளோரே' என்று சிவப்பிரகாசம் ஐந்து மலங்களையும் தொகுத்துக் கூறுவதைக் காணலாம். மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்றான்' என்று மூன்று மலங்களைக் குறிப்பிட்ட மணிவாசகப் பெருமானே, 90. சித்தியா-2-86 91. மேலது.2.87 92. சிவப்பிரகாசம்-32 93. திருவா. அச்சோ பதிகம்.9