பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அவை நேராக முத்தியைத் தருவதில்லை. ஞானம் மும்மலங் களையும் அகற்றி உயிரைத் தூய்மைப்படுத்தும் பின்னர் இயல்பாகவே தூயவனும், இன்ப வடிவினனுமாய இறைவனை அடைவிக்கும்; துன்பமற்ற - எல்லையில்லாத - அவனது பேரின்பத்தில் திளைக்கச் செய்யும். இக் கூறியவற்றால் படிமுறையாகச் சென்று சைவத்தை அடைந்து அதன்கண் உள்ள நால்வகை நெறிகளில் நிற்றலே உயிர் மும்மலங்களினின்றும் நீங்கி இன்புறுதற்கு வழியாகும். இதனைச் சித்தியாரால் இனிது உணரலாம். மேலும் “சரியை முதலிய மூன்றும் ஞானத்தின் வளர்ச்சி நிலைகளே” என்ற பேருண்மையை, விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்புமலர் காய்கனிபோல் அன்றோ பராபரமே." ான்ற தாயுமான அடிகளின் அருள்வாக்காலும் ஒருவாறு அறியலாம். - பந்தம்-கட்டு: முத்தி, மோட்சம், வீடுபேறு என்ற சொற்கள் ஒரே பொருளைக் குறிக்கும். இந்த நிலைக்கு மறுதலையான நிலை பந்தம், அல்லது கட்டு, அல்லது தளை ஆகும். பந்தம் என்பது யாது? அஞ்ஞானத்தால் உயிர்கள் தமது அறிவு விழைவு செயல்கள் முற்றிலும் செயற்படாமல் அல்லது நன்கு செயற்படாமல் கட்டுண்டு நிற்பதே பந்தம் என்பது. அந்தக் கட்டினின்றும் விடுபடுவதே வீடு அல்லது மோட்சம் - முத்தி. ஞானம் வராதவரையில் அஞ்ஞானம் நீங்காது. அதனால் கட்டும் நீங்காது. எனவே, ஞானம் ஏற்படாத வரையில் முத்தியும் கிடைக்கமாட்டாது என்பது தெளிவு. 4. சித்தியார்-8.11. 5. தா. பா. பராபரக்கண்ணி. 157