பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 277 அஞ்ஞானம் இருள்போன்றது; ஞானம் ஒளி போன்றது. ஒளி வந்தாலன்றி இருள் நீங்காதன்றோ? அது போல் ஞானம் வந்தாலன்றி அஞ்ஞானம் நீங்காது; அதனால் கட்டும் நீங்காது. ஒளிவருங்கால் இருள் தானே நீங்கிவிடுதல்போல, ஞானம் வருங்கால் அஞ்ஞானம் தானே நீங்கும்; நீங்கவே முத்தியும் கட்டுநீங்கி எளிதில் கிட்டும், கைகூடும். ஆகவே, ஞானம் தவிர, வேறெதனாலும் முத்தியை அடைய இயலாது என்பது ஈண்டு உணரப்பெறும், இதனைச் சித்தியாரின் ஒரு செய்யுளா லும் அறியலாம்; தெளிவு பெறலாம். இங்ங்னமே தாயுமான அடிகளும், மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர் வார்த்தைசொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே' என்றுவர். சற்குரு மூலம்தான் ஞானம் பெறல் முடியும் என்பது அடிகளாரின் உள்ளக் கிடக்கையாகும். அடிகளாரும் ஒருடாட லால் "உண்மையை அறிவித்த இடம் குருவாம் அருள் அலதொன்றிலதே" என்று கூறுதல் ஈண்டு அறியப்படும். குருவருளால்தான் தமக்கு நிட்டைநிலை கைவரப் பெற்றது என்பதை, சித்த மவுனி, வடபால் மவுனி நம்தீப குண்ட சுத்த மவுனி, எனுமூவ ருக்குந் தொழும்பு செய்து சுத்த மவுன முதல் மூன்று மவுனமும் தான்ப டைத்தேன் நித்த மவுனமல் லால்அறி யேன்மற்ற நிட்டை களே’ 6. சித்தியார் 8, 27 - தா. பா. பராபரக்கண்ணி-156 மேலது நினைவு ஒன்று-9 மேலது பாயப்புலி-26 ---