பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் எனற அடிகளாரின் பாடல் தெரிவிப்பதைக் கண்டு தெளிய லாம். இதனையே அப் பெருமான், - தானம் தவந்தருமம் சந்தமும் செய்வர்,சிவ ஞானம் தனை அணைய நல்லோர் பராபரமே." என்று மற்றோர் கண்ணியாலும் அரண் செய்வதைக் கண்டு தெளியலாம். (2) ஞானம் வருதற்குரிய வழிகள் ஞானம் வருவதற்கரிய சில அடிப்படையான படிநிலைகள் உள்ளன. அவை: () வேட்கை ஞானம் வருவதற்கு முதற்கண் அந்த ஞானத்தைப் பெறுதலில் வேட்கை-அவா-உண்டாதல் வேண் டும். பசியற்றவனுக்கு உணவு பயன்தராது; நீர் வேட்கை இல்லாதவனுக்கு நீர் பயன்தராது. இங்ங்னமே, ஞான வேட்கை இல்லாதவனுக்கு - ஞானத்தை அவாவி நிற்காதவனுக்கு - ஞானம் பயன்படாது. ஆகவே, ஞானம் பெறுவதற்கு ஞானம் பெறுவோனிடம் வேட்கை உண்டாதல் இன்றியமையாதது. (ii) மலபரிபாகம் ஆணவ மலத்தைப்பற்றி முன்னர் குறிப்பிட்டதை ஈண்டு நினைவு கூர்தல் வேண்டும். செம்பினிற் களிம்புபோல் உயிருடன் அநாதியே கலந்திருக்கும் இம்மலம் உயிருக்கு ஞானத்தில் வேட்கை எழாதபடி அவற்றின் அறிவைத் தடுத்து வைத்திருக்கும். இந்த ஆணவமலம் என்றும் அழிவதில்லை என்பதை நாம் அறிவோம். ஆயினும் அது சடமாதலால், உயிர்களின் அறிவைப் பிணித்து வைத் திருக்கும் அதனது ஆற்றல் அதனது மறுதலைப் பொருளின் ஆற்றலால் நாளடைவில் மெலிவடைந்து, பிணிக்கும் ஆற்றலி 10. மேலது பராபரக்கண்ணி-158