பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார் ஒடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்" என்று குறிப்பிடுவர். தாயுமான அடிகளும், ‘ஓடும் இருநிதியும் ஒன்றாகக் கண்டவர்கள்? என்று அப்பெருமக்களைச் சுட்டிக் காட்டுவர். இதனை மற்றோர் எடுத்துக் காட்டாலும் விளக்கலாம். இராமகிருஷ்ணரும் அவர்தம் துணைவியார் சாரதா தேவி யாரும் ஒரு சமயம் வாரணாசி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர். முன்னால் இராமகிருஷ்ணரும் அவருக்குப் பின்னால் சுமார் 30 அடி தொலைவில் சாரதாதேவியாருமாக சென்று கொண்டிருந்தனர். இராமகிருஷ்ணர் காலில் ஒரு பித்தளைத் தகடு தென்பட்டது. அந்த மஞ்சள்நிறத் தகட்டைக் காலால் மண்ணைத் தள்ளி மறைத்தார். பின்னால் வந்து கொண்டிருந்த தேவியார் என்ன மறைக்கின்றீர்கள்?’ என்று வினவ, அதற்கு அவர், அஃது ஒரு பித்தளைத் தகடு. நீ கண்டால் தங்கத் தகடு என்று நினைத்துக் கொள்வாய் என்று மறைத்தேன்’ என்று மறுமொழி தர, உடனே தேவியார் 'இன்னும் இந்த வேறுபாடு உங்கட்குத் தெரிகின்றதா?’ என்று வினவினார். இதிலிருந்து எவர் மனம் பக்குவப்பட்டது என்பதை அறியலாம். - (iv) சத்தி நிபாதம்: இருவினை யொப்பு நிகழந்தபிறகு 'சத்தி நிபாதம் உண்டாகும். சத்தி நிபாதம் என்பது என்ன? திரோதானமாய் நின்று மறைப்பைச் செய்துவந்த இறைவனது சக்தி மலபரிபாகம் உற்ற நிலையில் அருட்சக்தியாக மாறி ஆன்மாவிடத்தில் பதிதலே சத்தி நிபாதம் என்பது. நிபாதம் - 11. பெ. பு: திருக்கூட்டச்சிறப்பு-8 12. தா. பா. பராபரக்கண்ணி-16