பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் நால்வகைச் சத்தி நிபாதத்தால் முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன நிகழும் அவையும் சத்தி நிபாதம் போலவே, சரியையிற் சரியை, சரியையில் கிரியை சரியையில் யோகம், சரியையில் ஞானம் என்றாற் போல ஒவ்வொன்றும் நந்நான்கு வகையாய் நிகழும். மேலும் அவை நந்நான்கு வகையாய் இங்ங்னம் அளவின்றி விரிந்து நிற்கும். இங்ங்ணம் பலபட விரிந்து நிற்கும் சரியை முதலியவற்றால் ஆன்மாவின் அறிவு விரிந்து விளங்கி உண்ண்மயை உணரும் தன்மையை அடையும். இறுதியாக அது இறைவனது முற்றும் உணர்தல் முதலிய எண்குணங்களும் தன்னிடத்து விளங்கி நிற்க, தான் சிவமேயாகின்ற பெருமுத்தி நிலையை எய்தும் என்பதை ஈண்டு அறிந்து தெளியலாம். - - (v) தவம்: இது சத்தி நியாதத்தின் விளைவாகும். சிவபெருமானை நோக்கிச் செய்யும் செயல்களே தவத்தின் பாற்படும். சிவத்தைப் பேணின் தவத்திற்கு அழகு" என்ற ஒளவைப்பாட்டியின் வாக்கையும் ஈண்டுச் சிந்திக்கலாம். தவத்தோர் எனப்படும் துறவியரது செயலாகிய கடவுள் வழிபாடே தவம் என்பதாகும். தவம் செய்வது எற்றுக்கு? துன்பத்தை நீங்கிக் கொள்வதற்கும் இன்பத்தைப் பெறுவதற் குமே தவம் செய்கின்றனர். துன்பங்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய துன்பம் பிறவித்துன்பம். இதனை வள்ளுவப் பெருந்தகை பிறவிப் பெருங்கடல்' என்று பேசுவார். இன்பதுன்பங்கள் எல்லாவற்றிலும் மிகப்பெரிய இன்பம் வீடுபேறு எய்துதல்; முத்தி இன்பம் அடைதல். இந்தப் பிறவித்துன்பத்தைக் கெட்டொழிப்பவனும் முத்தி இன்பத்தை கொன்றை வேந்தன்.28 14. குறள்-40 (கடவுள் வாழ்த்து)