பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் அமுதத்தை உண்டால் அஃது அழிவதில்லை. உண்டார்க்கு அது பசியைப் போக்குதலேயன்றி, நரை திரை மூப்பு சாக்காடு என்பவற்றையும் நீக்கி நீடிய வாழ்வையும் அளிக்கும். இது போன்றனவே சிவபுண்ணியங்கள். அதனால் இவை தம்மைச் செய்தார்க்கு வேண்டுவனவற்றையெல்லாம் நல்கிப் பின் "அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டையும் தரும். எனவே, இவையே மேற்கொள்ளற் பாலன என்பது ஈண்டு அறியப் பெறும். . மக்களும் பிற உயிர்களுமாகிய பசுக்களிடத்தில் அன்பும் அருளும் கொண்டு அவற்றிற்கு நலம் செய்யும் போது அவற்றையே நினைந்து செய்யுங்கால் அவை பசு புண்ணியங்களாகும். இவற்றைச் சிவபிரானை மறந்து செய் யாமல் நினைந்து செய்யுங்கால் இவை சிவ புண்ணியங்களாகும் என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது. எல்லாச் சமயங்களும் உயிர்களின் அறிவு நிலைக்கேற்ற படிகளால் இறைவன் திருவுள்ளத்தில் அமைந்தன என்பதே சைவமயத்தின் உட் கிடையாகும். துணைநன்மலர் துய்த்தொழுஞ் தொண்டர் சொல்லிர் பனை மென்முலைப் பார்ப்பதி யோடுடனாகி இணையில் இரும்பூளை இடங்கொண்ட ஈசன் அணைவில் சமண் சாக்கியம் ஆக்கிய வாறே." போதிவரும் பிண்டியாரும் புகழல சொன்னாலும் நீதியாகக் கொண்டங்கருளும் நிமலன்" என்ற ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்குகளாலும், விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயம் செய்து எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற் கேற்ற தாகும்." 17. சம்ப தேவா. 2.35:10 . . 18. மேலது தேவா. 1.66.10 19. அப்பர் தேவா. 4.60:9