பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் - 285 என்ற அப்பர் பெருமானின் திருமொழியாலும் இதனை அறியலாம்." பிறிதோர் இடத்தில் அப்பர் பெருமான், இரப்பவர்க் கீய வைத்தார்; ஈபவர்க் கருளும் வைத்தார்; கரப்பவர்தங்கட் கெல்லாம் கடுநர கங்கள் வைத்தார்.' என்ற தம் திருப்பாடற் பகுதியால் புண்ணிய பாவங்கள் அனைத்தும் சிவபெருமானின் ஆணையே என உணர்தல் வேண்டும் என்று அறிவுறுத்தலையும் காணலாம். தாயுமான அடிகளும், அன்பர்பணி செய்யன்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே’ என்று கூறியிருப்பது மேற்கூறிய கருத்திற்கு அரணாக அமைகின்றது. அருணகிரி நாதரும், வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க் கென்று நொய்யிற் பிளவள வேணும் பகிர்மின்கள் ? 20. இத்தகைய ஒரு கருத்து வைணவ சமயத்திலும் உண்டு. நும்இன் கவிகொண்டு நும்இட் டாத்தெய்வம் ஏத்தினால் செம்மின் சுடர்முடி என்திரு மாலுக்குச் சேருமே. - என்ற நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் (3.9:6) இதனைக் கானல்ாம். - - 21. அப். தேவா, 4. 3.8:10 22. தா. பா. பராபரக்கண்ணி-155. 23. கந். அலங்-18