பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் என்றும், கெடுவாய் மனனே கதிகேள்; கரவாது இடுவாய், வடிவே லிறைதாள் நினைவாய்' என்றும் கூறியுள்ளமை இக்கருத்துபற்றியே என்பதை உணர் தல் வேண்டும். இவையெல்லாம் பதிபுண்ணியங்களே செயற்பாலன என்பதனைத் தவறுபட உணராமல் நன்கு உணர்ந்து கொள்ளத் துணைபுரிகின்றனவன்றோ? எனவே, சுருக்கமாக நாம் அறிய வேண்டுபவை: "சிவபெருமானை நினையாது செய்யும் எச்செயல்களும் 'வினை எனப்பட்டு பிறவிக்கு வித்தாகும். இவற்றையே சிவ பெருமானை நினைந்து செய்யின் இவை தவம்’ எனப்பட்டு முத்திக்கு வித்தாக அமையும். இதுபற்றியே பதி புண்ணியங் களே செயற்பாலன என்கின்றன. சிவநெறி நூல்கள்” என்பவையாகும். (3) சிவபுண்ணியங்கள் மனம் மொழி மெய்களால் சிவபெருமானை நோக்கிச் செய்யப்பெறும் செயல்கள் அனைத்தும் சிவபுண்ணியங்கள் என்பதை நாம் அறிவோம். ஆயினும் அவை அனைத்தும் சரியை, கிரியை, யோகம் என்று மூன்றாக வகுத்துப்பேசப் பெறும். இவ்வகைகளை ஈண்டு விளக்குவோம். சரியை இறைவன் ஆண்டான் என்பதையும் ஆரு யிர்கள் அவனுக்கு அடிமை என்பதையும் நாம் அறிவோம். இந்த ஆண்டான்-அடிமை நிலை எக்காலத்திலும் (பெத்தம்" முத்தி என்ற இரு நிலைகளிலும்) உள்ளதாகும் என்பதும் 24. கந். அநுபூதி-7 25. பெத்தம்-கட்டுண்ட நிலை