பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் செயல்களின் பரிணாமமேயாகும் என்பதை இன்று பாமரனும் அறிந்து கொள்ளுகின்றான். எனவே, அரசன் (முதல் அமைச்சன்) பணியாகிய எடுத்துக்காட்டினைத் தன்னலம் கருதாது இயற்றுவிக்கும் அளவில் கொண்டு இறைவன் பணியை உளங்கொண்டு தெளிதல் வேண்டும். உயிர்கள் இயல்பாகவே ஆணவ மலத்தால் மறைக்கப் பெற்றுத் தம் அறிவை இழந்து கிடக்கும் என்பதை நாம் அறிவோம். இந்நிலையில்,உயிர்கள் அந்த ஆணவ மலம் பரிபாகமான நிலையை அடைந்தாலும் இறைவனது நுண்ணிய நிலையை அடையும் ஆற்றலை உடையன ஆகமாட்டா. அதனால் முதற்கண் அவனைப் பருநிலையில் (துல நிலையில்) பொதுவாக உணர்ந்து, பிறகு நுண்ணிலையில் சிறப்பாக உணரும். பருநிலையில் பொதுவாக உணருங்கால் செய்யும் பணிகளே சரியை முதலிய மூன்றாம். நான்காவது படியான ஞானம் இறைவனை நுண்ணிலையில் உண்மையாக உணர்ந்து நிற்கும் பணியாகும் என்பதை உணர்தல் வேண்டும். முதற்கண் தமது இறைவனின் நுண்ணிலையை உணர மாட்டாத உயிர்கள் தன்னைப் பருநிலையாக உணர்தற் பொருட்டே வடிவமற்ற நிலை தனது உண்மை நிலையினின் றும் இறங்கி வடிவம் உடையனவாய்ப் பொது நிலையில் நிற்கின்றான். அந்த வடிவம் உருவம், அருவுருவம் அருவம் என்ற மூன்று வகையினையுடையது என்று முன்னர் விளக்கப்பட்டுள்ளது. இறைவனது வடிவம் திருமேனி என்று போற்றப்பெறும். மூவகைத் திருமேனிகளிலும் உருவத்திரு மேனியைத் தீண்டி வழிபடுதலும் திருமேனியின் வழிபாட்டிற் குத் தேவையானவற்றை அகல நின்று செய்தலும் சரியை எனப்படும். உமாமகேசர், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர் 26. இந்நூல்-பக். 75-77