பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 289 நடராசர் முதலிய வடிவங்களேயன்றி ஆசான் மூர்த்தியும், அடியார்களும் கூட இறைவனது உருவத்திருமேனிகளாகும் என்பதை நாம் அறிதல் வேண்டும். இத்திருமேனிகள் அனைத் தும் மாகேசுவர மூர்த்தம் என வழங்கப்படும். ஆதலின் மாகேசுவரபூசை அனைத்தும் சரியைத் தொண்டுகளில் அடங்குகின்றன. திருக்கோயிலில் இலிங்கமூர்த்தி முதலிய அனைத்து மூர்த்திகளையும் வழிபடும் முறைகளும் சரியையில் அடங் கும். திருக்கோயிலில் மூர்த்திகளை அகலநின்று வழிபடுதல், அங்கு நிகழும் வழிபாட்டிற்கு ஆகுமாறு நந்தவனம் அமைத்தல், பூக்கொய்து கொடுத்தல், பூமாலை, பூச்சரம் இவற்றைத் தொடுத்துத் தருதல், திருக்கோயில் திருவலகிடுதல், திருமெழுக்கிடுதல், உழவாரப் பணி செய்தல், பழங்கோயில் களை வேண்டிய அளவிற்குப் புதுக்கித் திருப்பணி செய்தல்.’ நித்திய நைமித்திக வழிபாடுகளைச் செய்வித்தல், அவற்றிற் குத் தேவைப்படும் குடம், கவசம், தீபக்கால்கள், விசிறி, கண்ணாடி முதலியன ஆக்கித் தருதல், சிவபுராணங்களையும், அடியவரது வரலாறுகளையும் கேட்டல், திருத்தலப் பயணம் முதலியவற்றை மேற்கொள்ளல் முதலிய இன்னோரன்ன பலவும் சரியையைச் சார்ந்த திருத்தொண்டுகளாகும். இதனை சித்தியார்” ஒருபாடலால் விளக்கும். அப்பர்பெருமான் இம் முறைக்கு எடுத்துக்காட்டாகின்றார். சுருங்கக்கூறின் "புறத் தொழில் அளவில் இறைவனது உருவத் திருமேனியை நோக்கிச் செய்யப்பெறுவன பலவும் சரியை"யில் அடங்கு 7 சிவாலயங்களுக்குச் செல்லாதவர்கள் சென்று இவற்றை அறிந்து கொள்ள வேண்டும். 28. நாட்டுக் கோட்டைத் தனவணிகர்கள் இப்பணியில் முன்னணியில் நிற்கின்றனர் என்பது உலகறிந்த உண்மை. 29. சித்தியார் 8.19