பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 29 | உபாசனை முதலாக வரும் காரியங்களின் தொகுப்பை யுடையது கிரியை. பக்தன் தன்னைப் பரமபதத் தந்தையின் தொண்டுக்காகப் பயபக்தியுடன் கட்டுப்பாடு, கடமை உணர் வுள்ள மகனாகக் கருதிப் பணிந்து ஒழுகுகின்றான். ஆகவே, அவன் தன் நேரம் முழுவதையும் இறைவனுக்குப் பணி செய்வதிலேயே கழிக்கின்றான். என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்ற அப்பர் பெருமானின் கருத்தையொட்டி இறைபணி செய்வதையே தனது வாழ்வாகக் கொள்ளுகின்றான். இது முதல் மார்க்கத்தைவிட மிகவும் நெருங்கிய அன்புடன் பணிவிடை செய்வதாகும். இம் மார்க்கத்தின் பயனாகக் கடவுள் அருகில் (சாமீபம்) செல்லலாம். 'யான்', 'என்னுடையது என்ற செருக்குகளைத் தகர்த்தெறிய வல்லது கிரியா மார்க்கமாகும். சித்தியாரும் இதனை ஒரு பாடலால் விளக்குகின்றது. ஞானசம்பந்தப் பெருமானை இம்முறைக்கு எடுத்துக் காட்டாகக் கொள்வர் சைவப் பெருமக்கள். திருக்கோயிலில் விளங்கும் இலிங்கத் திருமேனிகள் ஊரும் நாடும் ஆகிய உலகனைத்தின் பொருட்டாக ஏற்பட்டது. ஆகவே அங்குப் பிறர் பொருட்டாகச் (பரார்த்தமாகச்) செய்யப்பெறும் வழிபாடு நடைபெறும். எனவே, அவரவரும் தம் பொருட்டாக (ஆத்மார்க்கமாக)ச் செய்ய வேண்டிய வழிபாட்டினை இல்லத்தில் நிகழ்த்தலாம். இம்முறையில் வழிபாடு இயற்றுவோர் ஆசாரியர் வழியே இலிங்கத் திரு மேனியைப் பெற்று அவர்பால் வழிபடும் முறைகளைச் செவ்வனே அறிந்து கொண்டு அதன்படி செய்தல் வேண்டும். 30. அப். தே. 5.19.9 31. சித்தியார் 8, 20