பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் அழுந்துதலுமே சிவயோகமாம். இந்நிலைகளை அட்டாங்க யோகம் என்று யோக நூல்கள் விரித்துப் பேசும். இக்கூறியவற்றால் யோகம் என்பது, அகத்தொழில் ஒன்றால் மட்டிலும் சிவபெருமானது அருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடு என்பது தெளிவு. இந்த எட்டு உறுப்புகளுள் முதல் நான்கும் யோகத்தில் சரியை, ஐந்தாவ தும் ஆறாவதும் யோகத்தில் கிரியை, தியானம் யோகத்தில் யோகம்; சமாதி யோகத்தில் ஞானம் என்றும் இன்னும் பலவாறாகவும் விளக்கப்பெறும். சரியை, கிரியை, யோகம் என்பவற்றை மேற்கொண்டு ஒழுகும் முறைகள் பலவும் சிவாகமங்களில் சரியாபாதம், கிரியாபாதம், யோகபாதம் என்னும் பகுதிகளிலும் அவைபற்றி எழுந்த பிறநூல்களிலும் வகுத்துக் கூறப்பெற்றுள்ளன. யோகம்பற்றிய செய்திகள் யோக நூல்களில் விரிவாகக் கூறப்பெற்றுள்ளன. சுருங்கக் கூறின் யோகத்தில் பக்தன் தன்னைக் கடவு ளின் இணை பிரியா நண்பனாகக் கருதுகின்றான். புலன் பொருள்களின் தடுமாற்றத்தினின்றும் மனத்தை வெளிப்படுத்தி மிக உயர்ந்த தியானத்தில் ஈடுபட்டுக் கடவுளை வேண்டுவது ஆன்மா. இம்மார்க்கத்தின் பயனாக இறைவனின் உருவத்தை (சாரூபத்தை) அடையலாம்; அதாவது தெய்விகத் தன்மையை எய்தலாம். சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றும் முத்தியின் முதற்படிக்கட்டுக்குக் கொண்டு செலுத்தும். இதுவே பத முத்தியாகும்’ ஆனால் இதன்மூலம் ஆன்மா முழு விடுதலை பெறாது. ஏனெனில், மாயையானது மாயையால் ஏற்பட்ட உலகிற்கு மேலே ஆன்மாவைக் கொண்டு செல்ல முடிவ 34. இது பின்னர் விளக்கப்பெறும் பக். 331-32