பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த சாத்திரங்கள் - 13 தில்லைவாழ் அந்தணர்கள் இவருடன் கருத்து மாறுபட்டு இவரை வெறுத்தொதுக்கியிருந்தனர். இதன் காரணமாக ஒரு சமயம் கொடி ஏறாமலிருந்தது. பின்னர் அசரீரி சொல்லியபடி இதன் ஆசிரியரை அழைத்து வந்து கொடி ஏற்றுமாறு வேண்டினர். ஆசிரியர் அக்கொடி தானே ஏறும்படி ஐந்து திருப்பாடல்களைப் பாடியருளினார். முதற் பாடல் கட்டளைக் கலித்துறை ஏனைய நான்கும் வெண்பாக்கள். இந்நூலில் சித்தாந்தத்தின் நுண்ணிய பொருள்களும் திருவைந்தெழுத்தின் மறை பொருள்களும் நுவலப் பெற்றுள்ளன. - . (12) நெஞ்சு விடுதூது: இந்நூலில் ஆசிரியர் தம்மைத் தலைவியாகவும், தம் குருநாதர் மறைஞானசம்பந்தரைத் தலைவனாகவும் வைத்துப் பாடியுள்ளார். ஆசிரியர் தம் குருநாதரைக் காமுற்று வருந்தி அவர்பால் சென்று அவரது கொன்றை மாலையை வாங்கி வருமாறு தம் நெஞ்சைத் தூதாக விட்டது போல் செய்யப்பெற்ற தூதுப் பிரபந்தமாகும். இதில் தத்துவங்கள், உபதேசங்கள், புறச் சமய மறுப்புகள் முதலியன அமைந்துள்ளன. சிறப்பாகத் தசாங்கங்கள் பேசப் பெற்றிருப் பது குறிப்பிடத்தக்கது. 129 கண்ணிகளைக் கொண்ட கலி வெண்பாவால் ஆனது இந்நூல். (13) உண்மை நெறி விளக்கம்: இதன் ஆசிரியர் உமாபதி சிவம் தம் ஞானாசிரியரிடம் உபதேசம் பெற்ற பின்னர் அதைச் சிந்தித்துத் தெளிந்து நிட்டை கூடும் செயலில் உள்ள பத்து நிலைகளாகிய தசகாரியங்களை மிகச் சுருக்க மாகக் கூறுவது இந்நூல். இஃது ஆறு திருவிருத்தங்களால் ஆனது. இதனைத் தத்துவநாதர் என்ற வேறோர் ஆசிரியர் இயற்றியதாக வெண்பா ஒன்று உண்டு. எனினும், உமாபதி சிவம் செய்ததாகவே பெரும்பாலோர் கொள்வர். இதனைத் துகளறு போதத்தின் சுருக்கமாகக் கொள்வதும் உண்டு. (14) சங்கற்ப நிராகரணம்: இது பதினான்கனுள் இறுதி நூலாகும். இது சிவஞான சித்தியாரின் பரபக்கம் போன்றது.