பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் (5) தீக்கை வகைகள் குரு மூர்த்திகளாய் இருப்பவர்கள் தம் சீடர்கட்குத் தவத்தையும் ஞானத்தையும் அளிக்கும் முறையைச் சைவ சித்தாந்தம் தீக்கை தீட்சை) என வழங்கும். தீக்கை என்பது அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தருவது: என்று பொருள்படும். தீ க்ஷா என்பது வடமொழிப்பதம். அது 'rா-நீக்குதல்; தீ-தருதல் என்பது பொருள்படும். இந்தத் தீக்கை சமயதீக்கை, விசேட தீக்கை, நிருவாணதீக்கை என் மூவகைப்படும்." சமயதீக்கையால் சரியையும், விசேட தீக்கையால் கிரியை, யோகம் என்பவையும், நிருவானதீக்கை யால் ஞானமும் கிடைக்கும். இவற்றை விளக்குவோம். (அ) சமயதீக்கை:சத்தி நிபாதத்தின் முதல் நிலை (மந்த தரம்) என்பதை அறிவோம். இதில் சிவபெருமானது முதன்மையை ஒருவாறு உணரும் நிலை உண்டாகும். இதனால் சிவபெருமானது சிறப்பு (மூல மந்திரமாகிய திருவைந் தெழுத்தை (சிவாயநம என்ற பஞ்சாக்கரத்தை) துலமாக உணர்ந்து கணிக்கும் உரிமையும், சிவாகமங்களை ஒதி உணரும் உரிமையும், அவ்வாகமத்தில் சரியா பாதத்தில் நிற்கும் உரிமையும், மந்தர சத்திநிபாதத்திற்குச் சமயதீக்கையின் வழி அடைய முடியும். வேதத்தை ஓதுவதற்கும் வைதிக ஒழுக் கத்தை மேற்கொள்ளுவதற்கும் உபநயனம் இன்றியமையா தது என்பதை நாம் அறிவோம். அதுபோல சிவாகமங்கள் ஒதுவதற்கும் சைவ ஒழுக்கங்களை மேற்கொள்ளுவதற்கும் சமயதீக்கை மிகவும் இன்றியமையாதது, உபநயனம் பெறா தவன் வேதியன் ஆகான். அதுபோலவே சமயதிக்கை பெறாத வன் சைவன் ஆகான். சைவசமயியாகும் உரிமையைத் தருவதால்தான் இத்தீக்கை சமய தீக்கை என்ற திருப்பெயர் பெற்றது. சமயதீக்கை பெற்றவன் சமயி“ எனப்பெயர் பெறுகின்றான். . - ... -