பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 303 (ஆ) விசேட தீக்கை சமய தீக்கை பெற்று அதன் வழி நிற்கும்போது ஆணவமலம் மேலும் பரிபாக முற்றுச் சத்தி நிபாதம் மந்தமாய் நிகழும். அப்பொழுது சிவபெருமானை இலிங்க வடிவில் கண்டு வழிபடுதலாகிய கிரியைத் தொண் டில் இச்சை உண்டாகும், அங்ங்னம் இச்சை உண்டாகும்போது முன்னர் சமயத்க்கையைப் பெற்றவரிடமோ வேறோர் ஆசிரியரிடமோ விசேட தீக்கை பெற்றுத் தம் பொருட்டான (ஆன்மார்த்தமான சிவலிங்க மூர்த்தியை எழுந்தருளுவித்துக் கொடுக்கப் பெற்றுக் கிரியாபாத முறைப்படி அம் மூர்த்தியை நாடோறும் நியமமாக வழிபடுதலாகிய கிரியைத் தொண்டில் நிற்பர். சிவலிங்க மூர்த்தியை எழுந்தருள்வித்துக் கொடுக் கும் பொழுதே அகப்பூசை, புறப்பூசை முறைகளோடு யோக முறையும் உணர்த்தப்பெறும். கிரியைத் தொண்டினால் ஆணவமலம் மேலும் பரிமாகமுற்றவழிச் சத்தி நிபாதம் தீவிரமாய் நிகழும். இங்ங்னம் நிகழப்பெற்றோர் யோகநிலைக்கண் நிற்பர். இந்நிலையில் விசேடதீக்கை மந்த சத்தி நிபாதத்துக்கு உரியதாய்க் கிரியை யைத் தந்து பின்னர் அதுவழியாகத் தீவிர சத்தி நிபாதத்தை உண்டாக்கும். இந்நிலையில் யோகத்தைத் தரும் யோகத்திற்கு விசேடத்தில் விசேடமாக வேறு தீக்கை செய்யும் முறையும் சில இடங்களில் உண்டு. விசேட தீக்கை பெற்றுக் கிரியா பாதத் தில் நிற்போர் ‘புத்திரர்’ என்று வழங்கப்பெறுவர். யோகத்தில் நிற்போர் யோகியர் என்னும் பெயரைப் பெறுவர். (இ) நிருவாணதீக்கை. இவண் குறிப்பிட்ட இரண்டு தீக்கைகளால் சரியை கிரியை யோகம் என்னும் தவம் முழு வதும் கைவரப்பெறுவதால், நிருவாணதீக்கை ஞானத்திற்கே உரியதாகின்றது. சரியை முதலிய மூவகைத் தவங்களில் 40. சிவப்பிரகாசம்-9 (உரை)