பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் முதிர்ச்சியால் மலபரிபாகம் முற்றியவழி சத்தி நிபாதம் அதிதீவிரமாய் நிகழும். அப்பொழுது பதி, பசு, பாசம் என்றும் முப்பொருள் உண்மைகளின் இயல்பை உள்ளவாறு அறிய வேண்டும் என்ற பெரு வேட்கை எழும். அதாவது, நான் யார்? நான் வந்த வழி எப்படி? போவது எப்படி? எனக்கு வரும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம் யாது? துன்பம் நீக்கப்பெற்று இடையறாத இன்பத்தில் வாழும் நிலை இல்லையா? அப்படி உண்டாயின் அதற்கு வழியாது?’ என்று இங்ங்னம் பொருள் இயல்புகள் பலவற்றையும் உள்ளவாறு உணர்வதில் பேரவா நிகழும். நிகழவே வேண்டுவார் வேண்டுவனவற்றை ஈவானாகிய சிவபெருமான், ஞானச் செய்தியால் சிவோகம் பாவனையத் தலைபட்டுச் சிவமேயாய் நிற்கும் ஞானகுருவின் சுத்தான்மை சைத்தன்யத்தில் ஆவேசித்து நின்று நிருவாணதீக்கையைச் செய்தருளுவான். தாயுமானவர் இரண்டாம் முறை தம் குருவிடம் பெற்றது இந்தத் தீக்கையையே. அத்துடன் துறவு நிலையையும் ஞானோப தேசத்தையும் பெற்றார் என்பதை நாம் அறிவோம். சமய விசேடதீக்கைகளில் புறவுடம்பு அக வுடம்புகள் மந்திரங்களால் ஓரளவே தூய்மை அடைகின்றன. நிருவாண தீக்கையில் அத்துவாக்கள் ஆறனையும் முறைப்படி ஒன்றில் ஒன்றை அடக்கி எல்லாவற்றையும் அடக்கி நிற்கும் கலை யைச் சோதிக்கும். இதனால் ஆறத்துவாக்களையும் பற்றி நிற்கும் சஞ்சித கன்மங்களை (பழவினைகளை)" முற்றத் துடைத்து விடும். ஆன்மாவையும் வினைக்கட்டினின்றும் 41. அத்துவா-படிவழி, ஆறு-மந்திரம், பதம், வன்னம், புவனம் தத்துவம், கலை என்பன. இவை ஆறும் ஆன்மா மேலேறுவதற்குப் படிவழிபோல இருத்தலின் இப்பெயர் பெற்றது. 42. சஞ்சிதம் பழவினை; பிராரத்தம்-நுகர்வினை; ஆகாமியம் எதிர்வினை. -