பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் நித்தியம், நைமித்திகம், காமியம் என்று மூவகையாக நடைபெற வேண்டியவை. - (அ) நித்தியம்: அன்றாடக் கடமைகளைத் தவறாது செய்து வருவது. இது காலை, நண்பகல், மாலை என்ற மூன்று பொழுதும் நீராடல், திருநீறு கண்டிகை அணிதல், மந்திர நீரைத் தெளித்துக் கொள்ளுதல், மந்திர ஆற்றல்களை நெஞ்சு, முகம், தலை, சிகை, கை, கால் என்னும் உறுப்புகளில் பதிவித்தல், காற்றினை உள்ளிழுத்து வெளியேற்றி, வெளியிலிருந்து உள்ளுக்குவாங்கி நிரப்புதல் முதலியவற்றால் உடலைத் தூய்மை செய்து கொள்ளல் போன்றவை நித்திய கருமங் களாகும். மேலும் திரு ஐந்தெழுத்தைக் கணித்தல், ஆலய வழிபாடு, அடியார் வழிபாடு, இவற்றை மேற்கொள்ளல், அகப்பூசை புறப்பூசைகளை இயற்றல், தியான சமாதியில் நிற்றல், உபதேச மொழியைச் சிந்தித்தல், தெளிதல், நிட்டையில் அழுந்தல் முதலியவையும் இக்கருமங்களுள் அடங்கும். (ஆ) நைமித்திகம் ஆண்டுதோறும் நடைபெறும் நாள், பொழுதுகளில் தம் கடமைகளைத் தவறாமல் செய்துவருதல், வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்பவற்றுள் ஒன்றினானாதல் பலவற்றானாதல் சிறப்பெய்தும் நாள் அல்லது பொழுதுகளிலும், மற்றும் அம்பிகை, முருகன், தேவர், முனிவர், அடியார், மக்கள், அரசர், அசுரர் முதலியோரும், அஃறிணை உயிர்களும் சிவபெருமானது திருவருளைப் பெற்றுச் சிறப்பாகப் பூசித்தலும், விழா எடுத்தலும் ஆகியவை நைமித்திகக் கருமங்களில் அடங்கும். (இ) காமியம்: நாம் கோரும் பயன் கருதிச் செய்யும் வழிபாடுகள் காமிய கருமங்களாகும். நோய்நீக்கம், வாழ்நாள் திட்டம், மணப்பேறு, மக்கட்பேறு, வெற்றி முதலிய பயன்கருதிகாமியம் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு.

உயிர் பிரிந்த ஜீவன், தனக்குப் பிறகு தன்னுடைய கர்மாக்களை செய்ய ஒருவரும் இல்லாத போது, தனக்குத் தானே செய்து கொள்ளும் ஒரு அனுஷ்டானம் இந்த காமியம் என்னும் காமிய வ்ருசோசர்ஜனம். வைகாசி மாதம் வரை காத்திருந்து செய்யப்படவேண்டிய ஒன்று. அல்லது கார்த்திகை பெளர்ணமி (திருக்கார்த்திகை) அன்று செய்யப்பட வேண்டிய அனுஷ்டானம்.