பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 307 அவ்வப் பயனுக்கு ஏற்றவாறு சிவபெருமானுக்குச் செய்யப் பெறும் சிறப்பு வழிபாடுகளையும் விழாக்களையும் சில பல நாட்கள் செய்தல் இவ்வகைக் கருமங்களில் அடங்கும். மேற்கூறியவற்றுள் நித்தியத்தைத் தவிர ஏனைய இரண்டும் வசதிகள் படைத்தவர்கட்கேயன்றி எல்லோராலும் இயற்றுதல் முடியாது. ஆகவே, தீக்கை செய்யும் பொழுதே ஏனைய இரண்டும் அவர்கட்குக் கடனாகாதவாறு நிரப்பி யொழித்தல் இன்றியமையாதது. இங்ங்னம் நிரப்பி யொழிக்கும் தீக்கை, நிரதிகாரதீக்கை என வழங்கப்பெறும். அங்ங்னம் நிரப்பாது மூன்றையும் கடனாகவே வைக்கும் தீக்கை சாதிகார தீக்கை எனப்படும். இம்மூன்று வகைக் கருமங்களும் தம் பொருட்டாகவும் பிறர் பொருட்டாகவும் செய்யப்பெறும். இவற்றுள் நித்திய கருமம் நோயாலும் பிறவற்றாலும் அதனைச் செய்யமாட்டாது இடர்ப்படுவார் பொருட்டு, பிறரால் செய்யப் பெறும். ஏனைய இரண்டும் பிறர்பொருட்டுச் செய்யப்பெறுங் கால் அவற்றை விரும்பிய ஒருவர் பொருட்டும், பொதுவாக உலகத்தின் பொருட்டும் செய்யப்பெறும். ஆசாரிய சுவாமிகள் அனைவராலும் செய்யப்பெறும் கருமங்கள் யாவும் உலக நன்மை பொருட்டேயாகும். நைமித்திக, காமிய கர்மங்களைப் பிறர்பொருட்டுச் செய்வோர் ஆசாரியர் என்று வழங்கப்பெறுவர். சிவாச்சாரியர் கள் அனைவரும் இவ்வகையினரே. ஒன்றையும் பிறர் பொருட்டுச் செய்யும் உரிமையின்றித் தம் பொருட்டு சித்தி, புத்தி, முத்தி என்றவற்றை அடைய முயல்பவர் சாதகர்' என்ற பெயரைப் பெறுகின்றார். இவ்விரு திறத்தாருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்ததற்குச் செய்யப்பெறும் தீக்கை அபிடேகத்தீக்கை என்ற பெயரைப் பெறும்