பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் செய்ய வேண்டும் என்றே சிவாகமங்கள் கூறுகின்றன. ஆயி னும், நிரதிகார தீக்கையும் சபீஜமாகச் செய்தல் நடைமுறையில் உள்ளது. (எ) அங்கிதீக்கை: மேலே குறிப்பிட்ட முறைகளை யெல்லாம் பின்பற்றிச் செய்யப்பெறுவதே அங்கிதீக்கை ஆகும். அஃது அழல் ஓம்பிச் செய்வதாகிய அக்கினி காரியத் துடன் நிறைவேற்றப் பெறுவதால் ஒளத்திரி தீக்கை என்றும் வழங்கப்பெறும் இந்த தீக்கை ஞானவதி, கிரியாவதி என்ற இரு வகைகளுள் ஒருவகையாற் செய்யப்பெறும். செய்ய வேண்டும் என்றே சிவாகமங்கள் கூறும். குண்டம், மண்டலம், வேதிகை நெய், சுருக்கு, சுருவம் முதலிய அனைத்தையும் மனத்திற் கருதிக்கொண்டு அவற்றைக்கொண்டு செய்யப் பெறும் கிரியைகளையும் மனத்தினாலே செய்வது ஞானவதி ஆகும். மேற்சொல்லிய அனைத்தையும் புறத்தே அமைத்துக் கொண்டு கிரியைகளையும் வெளிப்படையாகப் புறத்தே செய்வது கிரியாவதி ஆகும். இது மாந்திரி தீக்கை என்றும் வழங்கப்பெறும். (ஏ) அங்கதீக்கை. அங்கியாகிய ஒளத்தரி தீக்கைக்கு அங்கமாகச் சிறந்தெடுத்துக் கூறப்பெறுவன ஆறு. அவை: () நயனம் () பரிசம், (i) வாசகம் (v) மானதம் (v) சாத்திரம் (i) யோகம் என்பனவாகும். r (1) நயனதீக்கை: ஆசாரியன் அங்க நியாச கர நியாசங் களால் தன்னைச் சிவமாகப் பாவித்துக் கொண்டு அப்பாவனை யோடு மாணாக்கனைக் கண்ணால் நோக்கி, அந்நோக்கினாலே. அவன் செய்த கருமங்களை அழித்தொழிப்பதாகும். இது சட்சு தீக்கை (சட்சு-கண் என்றும் வழங்கப்பெறும். வேள்விக்குத் துணையாக இருப்பதற்கு இராம லக்குமணர்களை விசுவாமித் திரர் கானகத்திற்கு இட்டுச் சென்றபோது அவர்கள் ஒரு பாலை