பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 3?? வனத்தின் வழியாகச் செல்ல நேரிடுகின்றது. அளவில்லாத ஆற்றலுடையவர்களாயினும் பூவினும் மெல்லியர் வருந்து வர் என்று கருதி அவர்களை நோக்கினார் முனிவர். அவர்கள் முனிவரை அடிபணிய, அவர் பலை, அதிபலை என்ற இரண்டு விஞ்சைகளை உபதேசிக்க, சிறுவர்கள் அவற்றை மனத்தில் சிந்திக்கவே, அவர்களின் பயணம் குளிர்ந்த நீரிலே செல்லுதலை ஒக்கின்றது. இஃது நயனதீட்சையை ஒருபுடை யொக்கும் என்று கருதலாம். (ii) பரிச தீக்கை: ஆசாரியன் தனது வலக்கையைச் சிவன் கையாகப் பாவித்து மாணாக்கனது சென்னிமேல் வைத்து அவனைச் சிவமாகச் செய்தல். (iii) வாசகதீக்கை: மந்திரங்களைச் சந்தர்ப்பத்திற் கேற்றவாறும் பொருந்து மாறும் மாணாக்கனுக்கு உபதேசிப்பது இது. (v) மானத தீக்கை. ஆசாரியன் தன்னைச் சிவமாகப் பாவித்து அந்தப் பாவனையுடன் மாணாக்கனது ஆன்மாவை உடலினின்றும் பாவனையில் கொணர்ந்து தனது ஆன்மாவிற் சேர்த்துச் சிவமானதாகப் பாவித்து, மீள அவ்வான்மாவை அவனது உடலில் சேர்த்தல் இத்தீக்கையாகும். (v) சாத்திரதீக்கை: ஆசாரியன் மாணாக்கனுக்குச் சிவாகமங்களையும் திருமுறைகளையும் ஒதுவித்தல் சாத்திர தீக்கையாகும். (wi) யோக தீக்கை: ஆசாரியன் மாணாக்கனைச் சிவயோகம் பயிலச் செய்வதாகும் இது. இந்த அங்க தீக்கைகள் ஒளத்திரி தீக்கைக்கு உரிய வர்க்கு அங்கமாகவும், அத்தீக்கைக்கு உரியரல்லாதவர்க்குத்