பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடுபேற்றுக்கு வழிகள் 3.13 இத்தகைய உறுதி அவர்களிடம் இல்லையாயின் அவரை உலகம் ஏற்றுக் கொள்ளாது, மாணாக்கரும் அத்தகையோரை நாடிச் செல்லார். அபிடேகதீக்கை பெறுவோர் இல்லறத் தவராயின், ஆதிசைவ அந்தணராகவே இருத்தல் வேண்டும்’ என்ற ஒரு விதியும் காணப் பெறுகின்றது. ஆசாரியன் மூலமாகச் செய்யப் பெறும் நிருவான தீக்கையின்றி ஞானம் உண்டாகமாட்டாதா? என்ற ஐயம் எழலாம். மும்மலம் உடைய சகலர்க்கு" ஆசாரியன் அருள் இன்றி நிருவான தீக்கையில்லாமல் ஞானம் உண்டாகமாட்டாது என்பது சிவாகமங்களின் தீர்ப்பு. இவர்கட்கு ஆணவமல மறைப்பு மிகவும் வன்மையாக இருக்கும். அதனால் இறைவன் ஆசாரியன் வாயிலாகச் செய்யும் பலவகைக் கிரியைகளால் அகற்றுவான். இம்மலம் நீங்கிய பிறகு ஞானத்தைச் சில சொற்களால் முதற்கண் அறிவுறுத்துவான். இங்ங்னம் அறிவுறுத்தப் பெற்ற பொருள்களை நூலோடு வைத்துச் சிந்திக்கச் செய்வான். இங்ங்னம் சிந்திக்கும் போது எழும் ஐயங்களை உடன்கண் இருந்து அவ்வப்பொழுது தெளிவிப் பான். தெளிவித்தபின்பும் அந்நிலையில் நிற்கும் போது, முறைமை எல்லாம் காட்டி நிற்பிப்பான். இப்பொழுது இவர்கட்கு ஞானம் தோன்றும். ஆசாரியன் செயலெல்லாம் அவரிடம் ஆவேசித்து நின்று செய்யும் இறைவனது செயலாகும். இதனால் தீக்கை என்பது, சிவபெருமானின் கிரியா சக்தியின் தொழிற்பாடாகும் என்பது அறியப்பெறும். சகலர் பொருட்டு ஆசாரியன் மூலம் இறைவன் நின்று செய்யும் இத்தீக்கை சாதார தீக்கை எனப்படும்." இக்கூறியவற்றால் 44. ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை யுடையவர். ஆணவமலத்தை மட்டும் உடையவர் விஞ் ஞானகலர்; ஆணவம், கன்மம் என்ற இருமலங்களை யுடையவர் பிரளயாகலர். 45. சாதாரம்-ஆதாரத்தோடு கூடியது என்பது பொருள்.