பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் நான்கு நிலைகளையுடையது. இந்த ஞானம் அரும்பு மலர் காய் கனி என்ற முறையில் வளரும் என்பது தாயுமானவரின் திருவாக்கு என்பதையும் அறிவோம். அறிதல் என்ற அளவில் சரியை முதலிய தவங்களும் ஞானமே என்றாலும் தத்துவ ஆராய்ச்சி வழியாக மெய்ப்பொருளாகிய இறைவனை அறியும் அறிவே ஞானம் எனச் சிறப்பித்துக் கூறப்பெறும்." இறைவனை அறநூல்கள் மெய்ப்பொருள் செம்பொருள் என்றெல்லாம் சிறப்பித்துப் பேசும். அதனால் அந்நூல்களில் ஞானம் மெய்யுணர்வு என்று கூறப் பெறும். வைதிகர்கள் மெய்ப்பொருளை பிரம்மம்' என்று கூறுவர். பிரம்மம்' என்றால் பெரியது' என்று பொருள். இதைவிடப் பெரியது ஒன்று இல்லையாதலால் அப்பெயர் இறைவனுக்குச் சூட்டப்பெற்றது. தாயுமானவர் இதனைப் 'பெரிய பொருள் என்றே குறிப்பிடுவர். பிரம்மத்தை அறியும் ஞானத்தை பிரம்மஞானம் என்றுகுறிப்பிடுவர் வைதிகர்கள். இறைவனைச் சைவர்கள் சிவம்’ என்று குறிப்பிடுவர். அதனை அறியும் இறையுணர்வு சிவஞானம்' என்ற பெயர் பெறு கின்றது. பதிஞானம்' என்பதுவும் இதுவே. இவையெல்லாம் தத்துவ ஆராய்ச்சிவழியாக மெய்ப்பொருளை அறியும் உணர்வையே குறிப்பனவாகும். ஞானத்தின் மிக்க அறிநெறி நாட்டில்லை ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம் ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே' என்ற திருமூலரின் திருவாக்கையும் காணலாம். ஞானத்தை விட மேலானமார்க்கம் இல்லை. வேறு எதுவும் முத்திக்குக் 35. சித்தியார் 8-22 36. திருமந்திரம். ஐந் தந், ஞானம்-1