பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வீடு பேறு () ஆன்மாவின் பெரும் பயணம் உயிர் வகைகள் வாழ்வு என்னும் பெரும் பயணம் போய்க்கொண்டுள்ளன. அப்பயணம் இறைவனை அடையும் பொழுது நிறைவு பெறுகின்றது. இறைவனை அடைதலும் முத்தியடைதலும் உயிர்கட்கும் இயற்கைக்கும் முதற் காரணமாய் இருப்பவன் இறைவன். இவை யாவற்றிற்கும் புகலிடமும் பிறப்பிடமும் அவனேயாகின்றான். எனவே இவை அனைத்திற்கும் அவனே முதலும் ஆகின்றான். இவற்றை யெல்லாம் நன்கு உணர்ந்து அநுபூதி நிலையிலுள்ள தாயுமான அடிகள், 'சித்தாந்த முத்திமுதலே' - என்று பகவர்வது இரத்தினச் சுருக்கமாக அமைந்திருப்பதைக் கண்டுமகிழலாம் சித்தாந்த முத்தியே என்று சைவ நூல்கள் சாற்றுவது சித்தாந்த சைவ முத்தி'யாகும். வாழ்க்கையின் மேலான நோக்கம் வீடுபேறு அடை வது, அலையும் மனம் அங்குமிங்கும் உழன்று உலகின் சுக துக்கங்களையெல்லாம் துய்த்து, மயக்கம் நீங்கி தான் செய்த 3. தா.பா.சின்மயானந்த குரு-1