பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 #8 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் தவறுகட்கும் குற்றங்கட்கும் மனம் நொந்து வருந்தி, தான் செய்தவற்றை நிவர்த்திக்க முயன்று இறுதியில் சாந்தம் அல்லது அமைதி பெற உண்மையான வீடு நோக்கி வருகின்றது. நாம் காலையில் அலுவல்கள் நிமித்தம் வெளியில் சென்று மாலையில் களைத்துப் போய் வீடு நோக்கித் திரும்புகின்றோம் அல்லவா? அது போலவே ஆன்மாவும் இவ்வுடலை ஊர்தியாகக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டு "சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டை” அடைய முயலுகின்றது. இந்த வீடு அமைதியானது, எல்லை யில்லாத பேரின்பம் அளிப்பது. ஆகவே, எதிர்மறையான மலம் நீங்குதலை நோக்கமாகக் கருதாது பேரின்ப மடைந்து எப்போழுதும் அந்நிலையில் நீடிப்பதையே நோக்கமாகக் கொள்ளுகின்றது சித்தாந்தம். அதன் பின்னர் அந்நிலை யினின்றும் மாறுவதே இல்லை. சிவலோகத்தை அடைத லையே - சிவப்பேறு பெறுதலையே - குறிக்கோளாகக் கருது கின்றான் சித்தாந்தி, உள்ள மலநீக்கி யோங்கு சிவானந்த வெள்ளந் திளைத்ததுவாய் மேவுதலே-கள்ளவிழ்பூங் கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்தில் சித்தாந்த முத்தியெனத் தேறு." என்கின்றார் தருமையாதீனத்தை நிறுவிய குருஞான சம்பந் தர். இம்முத்திப் பேற்றினைப் பெறுவதே சித்தாந்த ஞானத்தின் பயன் என்பதாகும். அதாவது சித்தாந்தமுத்தி சிவத்தோடு அத்துவிதமாய்க் கலந்து, ஆன்மா சிவனது பேரின்பத்தில் திளைத்திருப்பதேயாகும். தாயுமான அடிகளும் இந்த முத்தி நிலையைச் சுத்தாத்துவித முத்தி நிலை என்பர். Tமுத்தி நிச்சயம் -30