பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 3.19 'அறிவுற் கறிவு தாரகம்’ என் றறிந்தே அறிவோ டறியாமை நெறியிற் புகுதா தோர்படித்தாய் நின்ற நிலையும் தெரியாது குறியற் றகண்டா தீதமயக் கோதில் அமுதே! நினைக்குறுகிப் பிரிவற் றிருக்க வேண்டாவோ? பேயேற் கினிநீ பேசாயே.” என்ற பாடலால் இதனை யறியலாம். இக்கருத்தை மேலும் தெளிவாக்குவோம். மலங்கள் நிலையாய் நிற்கின்றன. ஆனால் அவற்றின் தீங்கு செய்யும் தன்மை போய்விடுகின்றது. அப்பொழுது பேரின்பத்தை அநுபவிக்கும் தனிச்சிறப்பினை உணர அவை உதவுகின்றன. அதற்கு முன்னர் ஆணவத்தால் ஏற்பட்ட இன்னல்களும் இத்தெய்விகக் கூட்டுடன் சேர்ந்த அநுபவத்தை மிகவும் வரவேற்கத்தக்கதாகச் செய்து விடுகின்றன. முத்திதனின் மூன்று முதலு மொழியக்கேள் சுத்தஅது போகத்தைத் துய்த்தலணு-மெத்தவே இன்பம் கொடுத்தலிறை யித்தைவிளை வித்தன்மலம் அன்புடனே கண்டுகொ ளப்பா." என்று இந்நிலையை விளக்குவர் திருவதிகை மனவாசகங் கடந்தார். இந்த அநுபவத்தில் ஆன்மா அநுபவப்பொரு ளுடன் நெருங்கிய தொடர்புகொண்டு அப்பொழுது சிவத்துடன் அத்துவிதக் கூட்டு அடைவதாகச் சொல்வர். அத்துவிதக் கூட்டு என்பது ஆன்மாவின் நாசத்தைக் குறிப்பிடவில்லை. ஆனால், மாறுபாடும் வரம்பும் உள்ள சீவான்மா தனது 5. தா.பா. சொல்லரிய-2 6. உண்மை விளக்கம்-51.