பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32;) சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் கட்டுணர்வில் நீங்கி முற்றறிவுடைய பரம்பொருளின் வியாபகத்தில் ஒடுங்கி ஒன்றாக நிற்கும் நிலையை அது குறிக்கும். ஆன்மா ஒரே மாதிரி அழிவற்ற தன்மையிலேயே நிற்கும். ஆனால் குறையுடனோ மாசுடனோ அஃது இருப்ப தில்லை. தனது எண்ணம் அனைத்தையும் அஃது இறைவனு டன் செலுத்தியுள்ளது. பகலவன் ஒளியில் விண்மீன்களின் ஒளி தெரிவதில்லை. அதனால் விண்மீன்கள் இல்லை என்று சொல்ல முடியாதல்லவா அதைப் போலவே இறையநுபவத் தில் ஆன்மாவின் பிரித்தறிய முடியா இயல்பு அஃது அழிந்து விட்டதாகி விடாது. இந்த நிலையில் ஆன்மாவிற்கு இழப் பில்லை. ஆனால் அப்போது தெய்விக அமைப்பில் அஃது ஆழ்ந்துவிடுகின்றது என்று சொல்லிவைக்கலாம். இவ்வுலக வாழ்வில் ஆன்மா ஆணவத்துடன் கூடி யுள்ளது என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த உறவால் உறவுகொண்டவற்றுள் ஒன்றும் அழிவதில்லை, அதைப் போன்றே முத்தியிலும் ஆன்மாவும் இறைவனும் நெருங்கிக் கூடியுள்ளனர். ஆனால் அவர்களில் ஒருவருக்கும் இழப் பில்லை. அவர்தம் தனி இயல்பும் மதிப்பும் மாறாமல் அப்படியே உள்ளனர். இதைச் சித்தாந்திகள், பசு பாசத்தில் அழுந்தி நிற்கும் நிலை பெத்தம்; அது பதியில் அழுந்தி நிற்கும் நிலையே முத்தி” என்று விளக்குவர். இந்த அத்துவிதக் கலப்புக்குத் தமிழில் தாள், தலை’ என்ற சொற்களின் புணர்ச்சியை எடுத்துக்காட்டாகக் கொள்வது மரபு. விளக்கம் தலை ஆன்மாவையும் தாள் இறைவனை யும் குறிப்பனவாகக் கொள்ளல் வேண்டும். அஃதாவது இறைவனது திருவடிகளில் ஆன்மாவின் தலை பொருந்து கின்றது என்பதே இதன் கருத்தாகும். தாளும் தலையும் தமிழ் Tசிஞர்.போ.சூத்திரம் 5 அதி2