பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கணவிதிப்படி புணரும்போது தாடலை ஆகும். தாள் என்பதில் உள்ள'ள மறைய, தலையிலுள்ள தா’ ‘ட’ ஆக மாறித் தாடலை ஆகின்றது. இதனை இரு சொற்கள் எனக் கொள்ளவும் முடியாது; ஒரு சொல்லெனக் கொள்ளவும் முடியாது. ஒரு விதத்தில் இஃது ஒரு சொல், இன்னொரு வித்தில் இரு சொற்கள். இதைப் போன்றே இறைவனோடு ஆன்மா ஐக்கியப்படும் விதமும் உள்ளது என்பதே சித்தாந் தத்தின் முடிந்த முடிபாகும். தாடலைபோல் கூடியவை தானிகழா வேற்றின்பக் கூடநீ யோகமெனக் கொள்." என்ற உமாபதிசிவத்தின் அருள் வாக்கைகையும் காணலாம். இறைவனும் ஆன்மாவும் இரண்டு அறக் கலப்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக ஆன்ம போதமும் கண்ணொளியும் ஒன்று சேர்ந்து செயற்படுவதைக் குறிப்பிடுவதும் வழக்கமாகும். மேலும் விளக்கம்: பதி, மெய், அறிவு, இன்பம்சச்சிதானந்தம் என்பவற்றையே இயல்பாகவுடைய பெரும் பொருள் என்பதை நாம் அறிவோம். பசு இதனை அறியுந் தோறும் அதற்கு இன்பம் புதிது புதிதாக விளையும். விளை யவே, அஃது அப்பதியையே மேலும் மேலும் எல்லையின்றி இன்பக்கடலில் திளைத்து நிற்கும். பெத்த காலத்தில் பதி இருந்தும் அதனது உதவி பாசமேயாய உயிர்க்கு விளங்காமை யால், அஃது இல்லாததே யானதுபோல் முத்தி காலத்தில் பாசம் இருந்தும் அதனது மறைப்பு பதியேயான உயிரிடத்துச் செல்ல மாட்டாமையால் அக்கினித் தம்பனத்தால் தடையுண்ட நெருப்புபோல அது தன் சக்தி மடங்கி இல்லாததேயாகும். அதனால் முத்தியிலும் மும்முதலும் உள்ளன என்பது துணிபு. ஆதலால், “உயிர்க்கும் இறைவனுக்கும் உள்ள கலப்பினால் 8. திருவருட்பயன்-8.4.