பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் ஒன்றாய், பொருள் தன்மையால் வேறாய், ஒரு செயலினிடத்து இருபொருளும் ஒருங்கு செல்லுதலால் உடனாய் நிற்கின்ற அபேதம், பேதம், பேதாபேதம் என்னும் மூன்றனுள் ஒன்றாகச் சொல்ல வராது. அம்மூன்றும் ஒருங்கு தோன்ற நிற்கும் அத்துவிதத் தொடர்புக்கு ஒரு காலத்தில் புதுவதாய் உண்டாகாது என்றும் உள்ளதேயாதலின், அத்தொடர்பு பற்றிப் பெத்தத்தில் பதியிடத்திற் செல்லாது பாசமே தானாய் நின்ற உயிர், முத்தியில் பாசத்தில் செல்லாது பதியே தானாய் நிற்கும்” என்பதே சைவசித்தாந்தம் கூறும் முத்தியாகும் என்பது தெளியப்படும். (2) முத்தியின் இயல்பு முத்தியின் இயல்புபற்றிச் சைவசித்தாந்த நூல்கள் பலபடியாக நுவல்கின்றன. அவற்றை ஈண்டுக் காண்போம். மெய்கண்டார், வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது வெய்யோனை ஆகாத மீன்போல்" என்று விளக்குவர். இவர்தம் மாணாக்கராகிய அருணந்தி சிவாசாரியார் பல பாடல்களால் இதனைத் தெளிவாக்குவார். அவற்றுள், - அறியாமை அறிவகற்றி அறிவி னுள்ளே அறிவுதனை அருளினால் அறியாதே அறிந்து குறியாதே குறித்து,அந்தக் கரணங்க ளோடும் கூடாதே வாடாதே குழைந்திருப்பை யாயின் பிறியாத சிவன்றானே பிறிந்து தோன்றிப் பிரபஞ்ச பேதமெலாம் தானாய்த் தோன்றி, நெறியாலே இவையெல்லாம் அல்ல வாகி நின்றென்றும் தோன்றிடுவன் நிராதார னாயே" 9. சி.ஞா.போ. சூத்திரம் 5. அதி2 10. சித்தியார்.8.30