பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் என்று விளக்கியுள்ளார். இந்தப்பாடல்களுள் இறுதிப்பாடலின் கருத்து சிறப்புடையது, “அந்தகன் (குருடன்) கண் பெற்றபின் சூரிய ஒளியைக் காணுதல் அவனுக்குப்புதிது போலத் தோன்றினும் உண்மையில் அவ்வொளி அவன்முன் இருந்ததா தல் போல, பாசப்பற்றினால் பாசமாய் நின்ற உயிர் அப்பசுத்து வம் நீங்கப்பெற்றபொழுது பதியை அடைந்து நிற்றல் அதற்குப் புதிதுபோலத் தோன்றுமாயினும், அவ்வடைவு அதற்கு முன்னரே இருந்ததன்றிப் புதிதாய் வந்தது அன்று' என்ற கருத்து சிறப்புடையதாய்த் தோன்றுகின்றதன்றோ?. மேலும் உமாபதி சிவம் முத்தி நிலைக்குப் பிறர் கூறும் உரைகளையெல்லாம் மறுத்து, “உயிர் பெத்தத்தில் ஆணவ மலத்தோடு எவ்வாறு தான் என வேறு தோன்றாது அதில் அழுந்தி நிற்கின்றதோ, அதுபோலவே முத்தியிலும் சிவத் தோடு தான் என வேறு தோன்றாது அதனில் அழுந்தி நிற்கும் என்பதே சித்தாந்த முத்தியாம்' என்று அறுதியிட்டு உரைப்பர். இக்கருத்தினையே தாயுமான அடிகள், ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத் தானுவினோ டத்துவிதம் சாருநாள் எந்நாளோ?" என்று பாடிப் போற்றினார். இன்னும் உமாபதி சிவம், ஒன்றானும் ஒன்றாது; இரண்டாலும் ஒசையெழா தென்றால்,ஒன் றன்றிரண்டு மில. என்று உரைத்தார், மற்றும் அவர், காண்பானும் காட்டுவதும் காண்பதுவும் நீத்துண்மை காண்பார்கள் நன்முத்தி காணார்கள் - காண்பானும் 13. சிவப்பிரகாசம்-17 14. தா.பா. எந்நாட் கண்ணி 28 15. திருவருட்பயன்-75