பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. சந்தானாசாரியர்கள் இவர்கள் மெய்கண்ட நூலாசிரியர்கள் என வழங்கப் பெறுவர். இவர்களைச் சந்தானாசாரியர்கள் என்று வழங்குவது பெரு வழக்கு. இவர்கள் எழுவர். அவர்கள் வருமாறு: (1) திருவியலூர் உய்யவந்ததேவனார். இவர் திருவுந்தியார் என்ற நூலை அருளிச்செய்தார். இதற்கு மேல் இந்த ஆசிரியரைப்பற்றி வேறு குறிப்பு ஒன்றும் தெரிய வில்லை. (3) திருக்கடவூர் உய்யவந்ததேவநாயனார்: திருவியலூர் உய்ய வந்த தேவனாரின் மாணாக்கர் திருவியலூர் ஆளுடைய தேவநாயனார். இவருடைய மாணாக்கர் திருக் கடவூர் உய்ய வந்த தேவநாயனார். இவரே திருக்களிற்றுப் படியார் என்றி. நூலை அருளிச் செய்தார். இது திருவுந்தி யாரின் பொருளை இனிது விளக்கும் வழிநூலாக அமை கின்றது. இந்த நூலைப் பற்றிய ஒரு வரலாறு உண்டு. நூலாசிரியர் ஆடடு வாணிகக் குலத்தில் தோன்றியவர். இக்காரணம்பற்றி இவர்தம் மெய்யுணர்வு நூலை ஏற்றுக் கொள்ளச் சிலர் ஐயுற்றனர். சிவதீக்கை பெற்ற பின்னர், ஒருவரை உலகியல் குலம் பற்றி உளங் கொண்டு வேறுபாடு கருதுதல் உண்மைச் சிவநெறிக்கு ஒரு சிறிதும் ஒவ்வாது என்ற