பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 327 நிலை கைகூடுமாயின், எவ்வுடம்பிலே இருப்பினும் உயிர்க்குக் குறை இல்லை. இதுபற்றியே அப்பர் பெருமான், புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்அடி என்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்." என்று வேண்டினார், பிறவtமையை வேண்டிய காரைக்கால் அம்மையார் ...மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்." என்று வேண்டினார்; சாக்கிய நாயனாரும், எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னியசீர் சங்கரன்தாள் மறவாமை பொருள்..." என்று கருதினார். சங்கரன்தாள் மறவாத நிலைமை கூடுவதாயின் பிறப்பைப்பற்றிக் கவலைகொள்ள வேண்டியதில்லை. ஆயின், பிறப்பு உள்ளபொழுது சங்கரன்தாள் மறவாத நிலை கை கூடுதல் இயலாது. இதுபற்றியே ஞானச் செல்வர்கள் பிறவிக்கு அஞ்சுகின்றனர். பிறவியை ஒரு பெரும் பிணியாகவே கருதுகின்றனர். துறக்கப் படாத உடலைத் துறந்துவெந் தூதுவரோடு) இறப்பன்; இறந்தால் இருவிசும் யேறுவன் ஏறிவந்து To தேவாரம்.4.94:8 19. பெ.பு.காரை.புரா.67 20. மேலது சாக்கி.புரா - 6.