பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு 329 (3) பல்வேறு முத்திகள் சைவசித்தாந்தத்தில் பலவேறு முத்திகள் பகரப் பெறுகின்றன. அவை அபரமுத்தி, பதமுத்தி, சீவன்முத்தி, பரமுத்தி என்பனவையாகும். இவற்றுள் பரமுத்தி மேலே விளக்கப்பெற்றது. அபரமுத்தி, பதமுத்தி இரண்டையும் ஈண்டு விளக்குவோம். (அ)அபரமுத்தி: தத்துவங்கள் அனைத்திலும் கீழ்ப்பட்ட தத்துவமாகிய பிருதிவி தத்துவத்திலும் பூவுலகிற்கு மேல் உள்ள புவர்லோகம், சுவர்லோகம் முதலிய உலகங்கள் யாவும் புண்ணிய உலகங்கள் என்பதை நாம் அறிவோம். இதனால் அவை அனைத்தும் பதவிகள் என்னும் பெயருக்கு உரியவையாகும். ஆயினும் பிருதிவி தத்துவத்தைக் கடவாத வரையில் முக்குணமாகிய மயக்கம் நீங்காமையால் சைவ சமயம் அவற்றைப் பந்த உலகம்’ என்பதன்றி ‘முத்தி உலகம் எனக் கொள்ளுதல் இல்லை. ஆகவே மால், அயன், இந்திரன் உள்ளிட்ட தேவர் பதங்களைச் சைவ சமயம் 'முத்தியுலகம்’ எனக் குறிப்பிடுதல் இல்லை என்பது ஈண்டு அறியப்படும். இவண் குறிப்பிட்டவர்கள் மும்மலம் உடைய சகலவர்க்கத்தினர்; வினைவழிப் பிறக்கும் பிறப்பினுள் புண்ணிய மிகுதியால் தேவராய்ப் பிறந்தோர். ஆகவே, இப்புண்ணியம் தீர்ந்தவுடன் தாம் செய்யும் வினைக்கு ஈடாகப் பிறவிகளிலும் செல்லுதற்குரியர்.முன்னைய பிறவிகளிலும் இத்தெய்வப் பிறவியிலும் செய்த சிவபுண்ணிய மிகுதியால் இவர்கள் இருவினை யொப்பும் சத்தி நிபாதமும் உடையவரா 23 சைவ இலக்கியங்கள் திருமாலைக் குறைத்துக் கூறுவதும், வைணவ இலக்கியங்கள் சிவபெருமானைக் குறைத்துக் கூறுவதும் மரபாக இருந்து வருகின்றன. இருவரும் ‘பரம்பொருள் என்று கொண்டு நாம் விருப்பு வெறுப்பற்ற நோக்கத்தைக் கடைப்பிடிப்போம். .