பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் பத முத்தியாம். குனருத்திரர் உலகத்தை அடைதலும் ஒருவகையில் பதமுத்தியாகும். இவ்வுருத்திர உலகமும் ஒரோ வழி சிவலோகம்’ என்று வழங்கப்பெறும் என்பது முன்னர்க் குறிப்பிடப்பெற்றது. - அபரமுத்தி, பதமுத்திகள் முடிந்த முடியல்ல. அபரமுத்தி தானங்களும் பதமுத்தி தானங்களும் பலவாதலின் அத்தானங் களில் அடையும் முத்தி நிலைகளும் பலவாக அமைகின்றன். இவை சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் என்று நான்கு வகைப்பட்டிருக்கும்." (i) சாலோகம்: சாலோகம் என்பது இறைவனது உலகம்: இருப்பிடம். அபரமுத்தி பதமுத்தி உலகங்களில் சென்று எங்கும் தடையற இயங்கும் உரிமையைப் பெற்றிருத்தலே 'சாலோகம்’ என்னும் முத்தி நிலையாம். ஒருவர் இல்லத்தில் பணிபுரியும் அகம்படிமைத் தொண்டர் அவ்வில்லம் முழுவதும் தடையறச் செல்லும் உரிமை போன்ற இவ்வுரிமையைத் தருவது சரியைத் தொண்டு இதுபற்றியே அது தாசமார்க் கம் (அடிமை நெறி) எனவழங்கப் பெறுகின்றது. தாசமார்க் கத்தைத் திருமூலர், ' எளியனல் தீபம் இடல்மலர் கொய்தல் அளிதின் மெழுகல் அதுதுர்த்தல் வாழ்த்தல் பளிமணி பற்றல் பன்மஞ் சனமாதி - தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே." என்று விளக்குவர். அடிமை நெறிக்கு அப்பர் பெருமானை எடுத்துக்காட்டாகக் கொள்வர். (ii) சாமீபம்: மேற்குறிப்பிட்ட முத்தி உலகங்களில் பணியாளர்போல அகல நில்லாது மைந்தர் போல அவ்வப் 25. திருமந். ஐந் தந். சாலோகம்-1 26. மேலது ஐந். தந். தாசமார்க்கம் - 1