பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடு பேறு י" ל" ... } 3 புவனப்பகுதிகளை அருகணைந்து நிற்கும் உரிமையைப் பெற்றிருத்தலே சாமீபம் என்னும் முத்தி நிலையாகும். இவ்வுரிமையைத் தருவது கிரியைத் தொண்டு. இதுபற்றியே அது சற்புத்திர மார்க்கம் (மகன்மை நெறி) என வழங்கப் பெறுகின்றது. இந் நெறியைத் திருமூலர், பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல் ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை நேசித்திட் டன்னமும் நீகத்தி செய்தன்மற். நாசற்ற சற்புத் திரமார்க்க மாகுமே.” என்று காட்டுவர் மகன்மை நெறிக்கு ஞானசம்பந்தப் பெரு மானை எடுத்துக்காட்டாகக் கொள்வர். (iii) சாரூபம். இக்கூறிய புவன பதிகளை அரு கணைந்து நிற்றலோடு அமையாது அவர்களோடு ஒத்த உருவம், பெயர் முதலியவற்றை உடையராய்த் தோழர்போல நெருங்கி அளவளாவும் உரிமையைப் பெற்றிருத்தலே ‘சாரூபம்’ என்னும் முத்தி நிலையாகும். இதனைத் திருமூலர், சயில்லோ கத்தினைச் சார்ந்த பொழுதே சயிலய தாகுஞ் சராசரம் போலப் பயிலும் குருவின் பதிபுக்க போதே கயிலை இறைவன் கதிர்வடி வாமே.” என்று கூறுவர். இதுபற்றிய உரிமையைத் தரும் யோக வழிபாடு சகமார்க்கம் - தோழமை நெறி என்று சாற்றப் பெறுகின்றது. திருமூலர் இந்நெறியை, சன்மார்க்கம் தானே சகமார்க்க மானது மன்மார்க்க மாமுத்தி சித்திக்குள் வைப்பதாம் 27. மேலது. ஐந்.சற்புத்திரமார்க்கம்-2 28. மேலது. சாரூபம் - 2 -