பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 சைவசித்தாந்தம் ஓர் அறிமுகம் பின்மார்க்க மானது பேராப் பிறந்திறந் துன்மார்க்க ஞானத் துறுதியு மாமே." என்று பேசுவர். தோழமை நெறிக்கு சுந்தர மூர்த்தி அடிகளை எடுத்துக் கொள்வர். (iv) சாயுச்சயம்: இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலை இது. சாயுச்சியத்தைத் தருவது ஞானமே. இதனைத் திருமூலரின் திருமந்திரம், . சைவம் சிவனுடன் சம்பந்த மாவது சைவம் தனையறிந் தேசிவஞ் சாருதல் சைவம் சிவதந்தன்னைச் சாராமல் நீவுதல் சைவம் சிவானந்தம் சாயுச் சியமே." என்று விளக்கும். இதுவே பெரும் பேறாகலின் இதனைத்தரும் ஞானம் 'சன்மார்க்கம்-நன்னெறி' என்று வழங்கப்பெறு கின்றது. இந்நெறியைத் திருமூலர், தெரிசிக்கப் பூசிக்கச் சிந்தனை செய்யப் பரிசிக்கக் கீர்த்திக்கப் பாதுகஞ் சூடக் குருபத்தி செய்யும் குவலயத் தோர்க்குக் தருமுத்திச் சார்பூட்டும் சன்மார்க்கந் தானே!" என்று விளக்குவர். இந்நெறிக்கு மணிவாசகப் பெருமானை எடுத்துக்காட்டாகக் கொள்வர். அபரமுத்தியிலும் பதமுத்தியிலும் சாயுச்சிய நிலைகள் உண்டு. இங்கு அப்புவனப் பதிகளோடு ஒத்த உருவம் முதலிய வற்றைப் பெற்றிருத்தலோடு அமையாது அவர்கள் ஆணை வழி அவர்கள் போலவே அவரது அதிகாரங்களைப் பெற்றிருத்தலே அபர சாயுச்சிய, பதசாயுச்சிய நிலைகளாகும். 29. மேலது. ஐந்தந்திரம்-சகமார்க்கம் 30. மேலது - சாயுச்சியம் -1 - 31. மேலது ஐந். தந் சன்மார்க்கம் - 3