பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 - . சைவசித்தாந்தம் ஒர் அறிமுகம் உண்மையை அறியாதவர்கள் இவர்கள். இதன் பெருமையை அறியும் பொருட்டு இந்நூல் திருச்சிற்றம்பலத்தின்கண் அம்மை-அம்பலவாணர் திருமுன்னர் காணப்பெறும் 'திருக்களிற்றுப்படியார் என்னும் திருப்படியில் வைக்கட் பெற்றது. அம்பலவாணரின் திருவருளால் அப்படியொடு பொருந்திய கல்லாலமைந்த களிற்றுக்கை எனப்படும் தும் புடைக்கை தூக்கி அம்பலவாணர் திருவடியில்வைத்தது இக்காட்சியைக் கண்டோர் வியப்பெய்தினர். நூலினைத் தலை மேற்கொண்டு போற்றினர். இம்முறையால் இந்நூலுக்குத் திருக்களிற்றுப் படியார் என்னும் திருப்பெயர் வழங்க லாயிற்று. . திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் சுந்தரமூர்த்தி மணிவாசகர் என்ற சமய குரவர் நால்வருக்குப் பின் சைவ சமயத்தைத் தழைத்தோங்கச் செய்வதற்குத் தமிழ் நாட்டில் பல “ஞானசந்தானங்கள் தோன்றின. பழமையாகவே திருமூலர் மரபு என்ற ஒரு சந்தானம் பேசப்பெறுகின்றது. தாயுமான அடிகளும் தமது குருநாதராகிய மெளன குருவை மூலன் மரபில் வருபவராகவே கொண்டிருத்தல், ஈண்டு நினைக்கத் தக்கது. திருவியலூர் உய்ய வந்த சந்தானம் என்பதாக ஒரு சந்தானம் இருந்ததை மேற்கூறப் பெற்ற இரண்டு நூல்களால் அறிய முடிகின்றது. )ே மெய்கண்ட தேவர் திருமுனைப்பாடி என்ற நடு நாட்டில் திருப்பெண்ணாகடம் என்னும் ஊரில் சைவ வேளாளர் குலத்தில் அச்சுதக்ளப்பாளர் என்பாருக்குத் தவப் புதல்வராகத் தோன்றியவர் மெய்கண்டதேவர். நாயனாரது தந்தை அச்சுதகளப்பாளருக்கு மக்கட்பேறு இல்லாக்குறை ஏற்பட்டிருந்தது. ஆதலால் அவர் தம் குல குருவாகிய 1. தா.பா. மெளனகுரு வணக்கம் காண்க.