பக்கம்:சைவ சித்தாந்தம்-ஓர் அறிமுகம்.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 சைவசித்தாந்தம் - ஓர் அறிமுகம் நிட்டையில் மீளாது நிற்கும் நிலையுடையோரே ஞானத் துள் ஞானமாகிய அதனுள்ளும் முடிவாகிய ஞானத்தைப் பெற்றோர் ஆவார். இவரே சொரூப சிவனாகிய பரமசிவ னோடு இரண்டறக் கலக்கும் பரமுத்தியை அடைவர் என்பது தெளியப்படும். (wi) முத்திநிலைகளை அடைந்தோரின் தன்மைகள்: இவற்றைத் தெரிவிப்பது இன்றியமையாதது. ஞானத்துள் ஞானமாகிய நிட்டை நிலையை எய்தினோர் அதனுள் நிற்க மாட்டாதவராயவழியும் மேற்கூரிய அபரமுத்தியைப் பெற்று அங்கு நின்றே பரமுத்தியையும் பெறுவர். இவர்க்கும் மீட்சி இல்லை. ஏனைய கேட்டல் முதலிய மூன்றினும் நின்று அபரமுத்தியைப் பெற்றோர் மீளுதல் சிறுபான்மை. இவர் மீண்டவழி தீவிர, அதிதீவிர பக்திகளையுடையவராய் நின்று ஆசான் மூர்த்தியை வேண்டாது இப்பிறவியிலேயே பரமசிவன் நேர்படப் பெற்றும் பெறாதும் அவனோடு இரண்டறக்கலத்தலாகிய பரமுத்தியைப் பெறுவர். இங்ங்னம் பெறும்வழித் தாம் செய்த தீவிர பக்தி அதிதீவிர பக்திச் செயலின் பயனை மேற்கூறிய அபரமுத்தி உலகங்களில் சென்று நுகர்ந்து ஏற்ற பெற்றியால் மெல்லவும் விரையவும் பரமுத்தியை அடைவர். அறுபான் மும்மை நாயன்மார் இத்திறத்தினரே என்பதை அவர்தம் வரலாறுகள் நோக்கி அறிந்து கொள்ளலாம். இவர்கள் ஞானத்தைப்பெற்று மீண்ட அபரமுத்தர் என்பது ஆசான் மூர்த்தியின்றியே சிவ ஞானமும் சிவபக்தியும் மிக்க உடையராயினராக விளங்கினமையால் இது தெளிவாகும். பதமுத்தியை அடைந்தோர் அவ்விடத்தே இரு வினை யொப்பு முதிரப்பெற்று ஞானத்தை அடைந்து அங்கு நின்றே அபரமுத்தி, பரமுத்திகளை அடைதல் சிறுபான்மை.